உஷார்..! ஆன்லைன் டேட்டிங்ல ஆட்டம் போடும் ஆண்களே..! இந்த 7 விஷயம் தெரிந்தால் ஆடி போவீங்க..!

தொழில் நுட்பம் வளர வளர பாதிப்புகளும் அதிகமாகதான் உள்ளது. அதற்கெல்லாம் உதாரணம் இன்றைய இளைஞர்கள் ஆன்லைன் டேட்டிங்ல அதிகம் ஈடுபடும் அதிர்ச்சி தகவல் தான்.

முகம் தெரியாத நட்புடன் ஒரே நாளில் தேடி பிடித்து, உல்லாச வாழ்க்கைக்கு வழி வகுக்கும் பல செயலிகள் தற்போது ஈசியாக பயன்படுத்த முடிகிறது...

கல்லூரி பயிலும் மாணவர்கள் முதல் காம வெறியில் சுற்றும் பலரும் இது போன்ற செயலியை பயன்படுத்தி, டேட்டிங் என்ற பெயரில் சீரழிந்து போவதை நினைக்கும் போது மனம் மிகவும் வருத்தம் கொள்ள செய்கிறது.

புரிதல் இல்லாமல் வாழ்கையே அழித்துக்கொள்கிறார்கள் என்றே கூறலாம்...இதனால் ஏற்படும் சில முக்கிய பிரச்சனை பற்றி பார்க்கலாம்..

இந்த பெண் இவ்வளவு அழகாக இருக்காளே என்று ஆண்களும், இந்த பையன் நல்லவனாக இருக்கானே என்று பெண்ணும் நினைத்துக்கொண்டு லைப்ல எப்படியாவது செட்டல் ஆகி விட வேண்டும் என காதல் என்ற பெயரில் டேட்டிங் சென்று கடைசியில் அது வேறு ஒரு விதமாக ஏமாற்றத்தில் முடியும்.

ஒரு பெண்ணை நம்பி தாங்கள் ஊர் சுற்றி திருமணம் வரைக்கும் செல்ல கூட திட்டம் போட்டு இருப்பீர்கள் ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் நண்பர் இருப்பார். அவருடன் ஏற்பட்ட சில பல பிரச்னைக்கு உங்களை பயன்படுத்தி, ஆண் நண்பரை வெறுப்பேற்ற செய்வார். இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வந்த பிறகு தான் நீங்கள் படும் அவஸ்தை உங்களுக்கே புரியும்...

ஒரு ஆண் மகனை முழுமையாக நம்பி வரும் பெண்கள் ஏராளம்.. அதுவும் ஒரே நாளில்...கொஞ்சம் அன்பாக பேசினாலே போதும்... அன்பிற்காக ஏங்கும் பெண்களை தன் வசம் வைத்துக்கொண்டு, அவர்களால் முடியும் வரை அந்த பெண்ணுடன் உறவில் இருப்பார்கள். பின்னர் திடீரென்று என்னை மன்னித்து விடு...எனக்கு முன்னாள் காதலி ஞாபகம் அதிகமாக இருக்கிறது. அதனால் இனி மேல் என் வாழ்கையில் வர வேண்டாம்....என்னை மன்னித்து விடு என கூறி, வேறு புது பெண்ணை பிடிக்க தொடங்கி விடுவார்கள்

ஒரு சில பெண்கள், பையன் எந்த அளவிற்கு வெயிட்டா இருக்கான் என்று பார்த்து, அவர்கள் மூலம் தனக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் வாங்கி தர சொல்வார்கள்..பின்னர், உங்களை நான் தன்னுடைய நண்பனாக தான் நினைத்தேன் என கூறி நைசா சென்று விடுவார்கள்

இன்னொரு கதை உண்டு....புதுசா ஒரு பெண்ணை பார்க்க போறோமே என்று ரொம்ப உற்சாகமா அவர்கள் அலுவலகம் அருகில் சென்று கூட  போன் செய்து அவர்களை மீட் பண்ணுவார்கள்...அப்போது அந்த பெண் தன்னுடைய ஆண் நண்பனுடன் வந்து நிற்கும்....அப்போது கிடைக்கும் பல்பு எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்..

இன்னொரு விதம்....ஏதாவது பிசினெஸ் செய்ய துடிப்போடு இருக்கும் சிலர், இது போன்று  தன்னிடம் அசடு வழிந்து வரும் ஆணோ பெண்ணோ இவர்களை தாங்கள் செய்ய உள்ள பிசினசில் முதலீடு செய்யுமாறு கேட்பார்கள்...டேட்டிங் மீட்டிங் பிசினஸ் மீட்டிங்க மாறி போகும்

இன்னும் ஒரு சிலர் வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காக வெளி நாட்டில் வாழும் பெண்ணை அல்லது ஆணை குறி வைத்து காதல் கொள்ள செய்வார்கள். அதற்கு முன்னதாக திருமணம் செய்துக்கொள்ள சொல்லிக்கொண்டே இருப்பார்கள்

ஒரு சிலர் தன்னுடைய புகைப்படத்தை மிக அழகானதாக காண்பித்து, அழகிய பெண்ணுடன் பேசி வருவார்கள்...என்றாவது ஒரு நாள் மீட் செய்யும் போது, நேரில் பார்த்த உடன் போட்டோல பார்த்த மாதிரி  இல்லையே என்று, அந்த ஆண் மகனின் சீட்டிங் புரிந்துக்கொண்டு அமைதியாக எஸ்கேப் ஆகி விடுவார்கள்....

ஒரு ஆண் மகனை நம்பி குறுகிய காலத்தில் மிக நெருக்கமாக இருப்பது கண்டிப்பாக பெண்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.