செக்ஸ் என்பது திருமணத்திற்கான பிறகான அந்தரங்க வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. செக்ஸ் மீதான ஆர்வம் என்பது நமக்கு எப்போது வரும்? எப்படி வரும்? என்ன காரணத்திற்காக வரும்? என்று குறிப்பிட்டு கூறிவிட முடியாது. சிலருக்கு இளம் வயது முதலே செக்ஸ் மீது அதீத ஆர்வம் இருக்கும். சிலரோ திருமணத்திற்கு பிறகு செக்ஸ் மீது ஆர்வம் ஏற்படலாம். மேலும் சிலருக்கோ சில சமயங்களில் செக்ஸ் மீது ஆர்வம் இருக்கும், சில சமயங்களில் செக்ஸ் மீது ஆர்வம் இருக்காது. 

இவை அனைத்துமே இயல்பான ஒன்று தான். இது போன்றவற்றை நினைத்து யாரும் கவலைப்படுக் கொண்டிருக்க வேண்டாம். ஆனால் செக்ஸ்சில் நல்ல ஆர்வத்துடன் இருந்த பெண்கள் திடீரென செக்சை வெறுப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இரண்டு நாளுக்கு ஒரு முறை செக்ஸ், வாரத்திற்கு ஒரு முறை செக்ஸ், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செக்ஸ், மாதத்திற்கு ஒரு முறை செக்ஸ் என்பது மாறி பல மாதங்களாக செக்சே இல்லை என்கிற நிலையில் கூட பல தம்பதியினர் இருக்கின்றனர். 

திருமணமான துவக்கத்தில் செக்ஸ் மீது இருந்த ஆர்வம் படிப்படியாக குறைது இயல்பான ஒன்று தான். ஆனால் செக்சை வெறுப்பது என்பது இயல்பானது அல்ல. அதாவது கணவர் செக்சுக்கு அழைக்கும் போது மனைவிக்கு இயல்பாகவே செக்ஸ் மீது ஆர்வம் வர வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஆர்வம் இல்லாத நிலையில் கணவருக்காக சம்மதம் தெரிவிப்பதும் இயல்பான ஒன்று தான். இதே போல் கணவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது மனைவிக்கு திடீரென செக்ஸ் ஆசை ஏற்படும், கணவரை எழுப்பும் நிலை ஏற்படும். ஆனால் செக்ஸ் மீதான வெறுப்பு என்பது கணவர் எவ்வளவு அழைத்தாலும் உடன்பட மறுப்பதாகும். மேலும் செக்ஸ் பற்றிய சிந்தனை வந்தால் கூட பெண்களுக்கு டென்சன் ஏற்படும். ஒரு கட்டத்தில் கணவருடன் தனி அறையில் இருக்கவே பெண்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். இதற்கான காரணங்களை தற்போது பார்க்கலாம்.

1) மன அழுத்தம்  பெண்கள் செக்சை வெறுப்பதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மன அழுத்தம். மன அழுத்தத்தில் இருக்கும் போது உணவு கூட சாப்பிட முடியாது. அப்படி இருக்கையில் எப்படி செக்சில் ஈடுபட முடியும். உண்மை தான் மன அழுத்தம் வந்துவிட்டால் பெண்களால் செக்சில் ஈடுபட முடியாது. மிகப்பெரிய வெறுப்பு ஏற்படும்.

2) வேலைப்பளு  வேலை பார்க்கும் இடங்களில் ஏற்படும் அதிகப்படியாக வேலைப்பளு பெண்களை செக்சை பற்றி நினைத்து கூட பார்க்க முடியாத நிலைக்கு தள்ளிவிடும். ஒரு கட்டத்தில் வேலைப்பளுவை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் யோசிக்க முடியாது. எனவே வேலைப்பளு என்பது பெண்கள் செக்சை வெறுப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம்.

3) குழந்தை பிறந்த உடன் இயல்பாகவே சில பெண்களுக்கு செக்ஸ் மீது நாட்டம் குறையும். அதிலும் குழந்தை இருக்கும் போது கணவன்கள் அருகே செல்லும் போது பெண்களுக்கு வெறுப்பு ஏற்படும். இப்போது தான் குழந்தை பிறந்துள்ளது அதற்குள்ளா? என்கிற எண்ணம் சில பெண்களுக்குள் செக்ஸ் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

4) உடல்நலக்குறைவு   உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாற்றங்களும் கூட பெண்களுக்கு செக்ஸ் மீது வெறுப்பு ஏற்பட காரணமாக இருக்கும். அதாவது வழக்கமான காய்ச்சல் வயிற்று வலி என்பதை தாண்டி வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் பெண்கள் செக்சை வெறுப்பார்கள்.

5) தங்கள் உடல் மீதான சந்தேகம் தங்கள் உடல் அமைப்பு சரியாக இல்லை, மற்ற பெண்களை போல் தான் அட்ராக்டிவாக இல்லை என்று நினைக்கும் பெண்களுக்கு செக்ஸ் மீது  ஆர்வம் இல்லாமல் அதிக வெறுப்பு இருக்கும். ஏனென்றால் செக்சின் அடிப்படையே நமது உடலை நாம் விரும்புவது தான். அப்படி இருக்கையில் ஒரு பெண் தனது உடல் அமைப்பை வெறுக்கும் பட்சத்தில் அவருக்கு செக்ஸ் மீதும் வெறுப்பு ஏற்படும்.