பிரதமர் நிதிக்கு "தலாய்லாமா" நன்கொடை.! கடிதத்தில் சொல்லப்பட்ட  சில முக்கிய விஷயங்கள் .! 

கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி செய்து நிலைமயை சமாளிக்க பிரதமர்  நரேந்திர மோடி நாட்டு  மக்களிடையே தங்களால் இயன்ற நிதியுதவியை அளியுங்கள் என தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து  நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் உள்ள திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, தனது அறக்கட்டளையில் இருந்து பிரதமர் நிதிக்கு நிவாரண தொகை வழங்கி உள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்,"நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கை அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது. உங்களுடைய நடவடிக்கைக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. மேலும் தற்போது மிக வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக அவர்களுக்கு தேவைப்படும் அவசர உதவிக்கு தனது நன்கொடை சற்று உதவியாக இருக்கும் என குறிப்பிட்டு உள்ளார் 

மேலும் நாடு முழுவதும் உள்ள பெரும் நிறுவனங்கள்,சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என  பெரும்பாலானோர் பிஎம் கேர் நிதிக்கு பணம் அனுப்பு வருகின்றனர். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது