Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வைரஸ் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய தமிழக அரசு...!

4 ஆண்டுகளுக்கு முன் ஜே.அக்னிஷ்வரால் தொடங்கப்பட்ட கருடா ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் சேவையை பெற அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி 300 ட்ரோன்கள் மற்றும் 500 பைலட்டுகள் உதவியுடன் தமிழகம் முழுவதும் கிருமி நாசினியை தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ISO 9001 தர சான்றிதழ் பெற்றுள்ள கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அரசின் வனத்துறை, காவல்துறை, வேளாண், மின்சார வாரியம் ஆகியவற்றிற்கு சேவை புரிந்துள்ளது.

Surgical Strike on Coronavirus...tamilnadu government action
Author
Chennai, First Published Apr 5, 2020, 10:32 AM IST

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசும், புதிய திட்டத்தை வகுத்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

 இத்திட்டத்திற்காக 4 ஆண்டுகளுக்கு முன் ஜே.அக்னிஷ்வரால் தொடங்கப்பட்ட கருடா ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் சேவையை பெற அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி 300 ட்ரோன்கள் மற்றும் 500 பைலட்டுகள் உதவியுடன் தமிழகம் முழுவதும் கிருமி நாசினியை தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ISO 9001 தர சான்றிதழ் பெற்றுள்ள கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அரசின் வனத்துறை, காவல்துறை, வேளாண், மின்சார வாரியம் ஆகியவற்றிற்கு சேவை புரிந்துள்ளது.

Surgical Strike on Coronavirus...tamilnadu government action

தயாரிக்கப்பட்டுள்ள 300 ட்ரோன்கள் 10 முதல் 15 லிட்டர் அளவிலான கிருமி நாசினியை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அந்த ட்ரோன்களை இயக்கும் பைலட்டுகள், அனுபவமிக்கவர்கள். கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலும், ட்ரோன்களை செலுத்தி கிருமி நாசினி தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 300 ட்ரோன்களும் 500 பைலட்களும் அடங்கிய கருடா ஏரோஸ்பேஸ் குழுவினர் அடுத்த 30 நாட்களுக்கு தினமும் 12 மணி நேரம் தொடர்ந்து பணியாற்ற இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 6000 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று கிருமி நாசினி தெளிக்கும் வகையில் ட்ரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் சரியான தீர்வை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர் கண்டுள்ளார். இந்த திட்டம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் வைரஸ் பரவலை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது என்று பெருமையுடன் கூறினார்.

Surgical Strike on Coronavirus...tamilnadu government action

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் கூறுகையில் கருடா ஏர்ஸ்பேஸ் நிறுவனத்தின் சேவை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த திட்டத்துடன், மக்கள் சமூக தொலைவை கடைப்பிடித்து, அரசின் அறிவுரைகளை பின்பற்றினால், இந்த வைரசில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.

ட்ரோன் நன்மைகள்;-

1.  ஒவ்வொரு ட்ரோனும் ஒரு நாளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று கிருமி நாசினியை தெளிக்கும் திறன் கொண்டது. மொத்தமாக 300 ட்ரோன்கள், ஒரு நாளில் 6000 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். ஆனால், மனிதரால் ஒரு நாளில் 4-5 கிலோ மீட்டர் தூரம் வரையில் தான் செல்ல முடியும்.

2. சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் ஈடுபட்டால், அவர்களுக்கு பாதிப்பு நேரும் அபாயம் உள்ளது.  ட்ரோகள் பயன்படுத்தப்பட்டால் அந்தக் கவலையில்லை. தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொத்தமாக 12 மணிநேரம் தொடர்ந்து இயங்கும். ஆனால்,  மனிதர்ககளால் எடையை சுமந்துகொண்டு 6 அல்லது 8 மணி நேரம் வரை தான் பணியாற்ற முடியும்.

3. தொழிலாளர்கள் கிருமி நாசினியை தரையில் மட்டுமே தெளிப்பார்கள். ஆனால், பெரிய கட்டிடங்களில் எப்படி அதை தெளிப்பது  நம் நகரங்களில் பல உயரமான கட்டிடங்கள் அதன் மீது கிருமி நாசினியை தெளிக்க,  ட்ரோன்களால் தான் முடிவுயும். இதில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் 150 மீட்டர் (400 அடி) வரை உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Surgical Strike on Coronavirus...tamilnadu government action

4. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர அரசு துறைகளும், மருத்துவமனைகளும் தொடர்ந்து இயங்கி வருகின்றன. மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் தங்கள் உயிரை பெரிதாக கருதாமல் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கின்றனர். அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கருடன் ஏர்போர்ஸ் இந்த போராட்டத்தில் குதித்துள்ளது.

 கருடா ஏர்போர்ஸ் குழுவினர் அக்னி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி இணைந்து 24.03.2020 அன்று கிருமி நாசினியை தெளிக்கும் ட்ரோன்களை பரிசோதனை செய்தனர்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை ஓட்டம் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios