Asianet News TamilAsianet News Tamil

இந்த நோய் இருந்தால் கண்டிப்பாக செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும்? எச்சரிக்கும் மருத்துவர்கள் !!

சர்க்கரை நோய் உள்ளவர்களால் தாம்பத்திய வாக்கையில் ஈடுபட முடியுமா? அது தொடர்பான பாதிப்பு இருக்குமா என்பதுதான் தற்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி? அது தொடர்பாக மருத்துவர்கள் பல விளக்கங்களை அளித்துள்ளனர்.

sugar patients are affected sexual problems
Author
Chennai, First Published Oct 26, 2018, 10:31 PM IST

இந்த நவீன யுகத்தில் பெரும்பாலோனோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் லட்சக்கணக்கனோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோயால் மனிதர்களின் ஒவ்வொரு உறுப்பும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

கண்கள், சிறுநீரகம், கால்கள், நரம்பி மண்டலம் போன்றவை அடுத்தடுத்து பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்களின் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுமா? என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கங்களும் எச்சரிக்கைகளும் விடுத்துள்ளனர்.

sugar patients are affected sexual problems

நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண்-பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குறையத் தொடங்குவதாகக் கவலைபடுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

sugar patients are affected sexual problems

 சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது.

இதனால் ஆணுறுப்பு விறைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், உடலுறவுக்கான உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறட்சியடைதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

sugar patients are affected sexual problems

இதில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள். ஆண்களுக்கு விறைப்புத் தன்மையை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகிறது என்பது பொதுவான விஷயம்.

ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, பதற்றம், அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.

sugar patients are affected sexual problems

ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு செக்ஸ் பாதிக்கப்படும் என்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே சர்க்கரை நோயை வருமுன் காப்பதும், வந்தால் அதை கட்டுக்குள் வைத்திருப்பதும் மிக முக்கியமானது.

Follow Us:
Download App:
  • android
  • ios