காதல் வயப்பட்ட ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நேரம் காலம் பார்க்காமல் செல்போனில் பேசிக் கொண்டிருப்பது அந்தக்காலம். ஆனால் தற்போது வாட்ஸ் ஆப் மூலமான சாட்டிங் தான் இருவருக்கும் இடையே காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அதிலும் காதலியுடன் செக்ஸ் தொடர்பாக சேட் செய்வது என்பது ஒவ்வொரு காதலனுக்கும் கனவாக இருக்கும். ஆனால் செக்ஸ் தொடர்பாக சேட் செய்வதற்கு முன்னதாக மிகுந்த கவனம் தேவை. இல்லை என்றால் சிக்கலுக்கு வழிவகுக்கும். 

1) காதலி வேலை நேரத்தில் தவிர்க்க வேண்டும் பொதுவாக உங்கள் காதலி ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுபவர் என்றால், அவர் அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் செக்ஸ் தொடர்பான சேட்டிங்கை தவிர்ப்பது நல்லது. நீங்கள் ஓய்வாக இருக்கிறீர்கள் என்பதற்காக உங்கள் காதலியும் ஓய்வாக இருப்பார் என்று அர்த்தம் இல்லை. மேலும் உங்கள் காதலி பணியாற்றும் அலுவலகத்தின் செயல்படும் முறை சிக்கலானதாக கூட இருக்கலாம். எனவே அவர் அலுவலகத்தில் இருக்கும் போது செக்ஸ் தொடர்பான சேட்டிங்கை தவிர்க்கலாம்.

2) பிரச்சனைகளை தீர்க்க உதவாது உங்கள் காதலியுடன் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய செக்ஸ் சாட்டிங்கை கையில் எடுக்கலாம் என்று நினைத்தால் அதனை மறந்துவிடுங்கள். ஏனென்றால் செக்ஸ் தொடர்பான சேட்டிங் உங்கள் பிரச்சனையை மேலும் சீரியசாக்கிவிடும். எனவே பிரச்சனையை தீர்க்கலாம் என்று கருதினால் அந்த பிரச்சனை குறித்து சேட் செய்யுங்கள், மாறாக செக்ஸ் பக்கம் போனீர்கள் என்றால் அதிக பிரச்சனை தான்.

3) ஓவர் அட்வான்டேஜ் வேண்டாம் செக்ஸ் தொடர்பான சேட்டிங்கின் போது உங்கள் காதலி போதும் என்று கூறிவிட்டால் நிறுத்திவிடுவது நல்லது. மேலும் அவர் சில விஷயங்கள் குறித்து சேட்டிங் வேண்டாம் என்றால் அதனை மதிக்க வேண்டும். மாறாக அவர் வேண்டாம் என்று கூறும் விவகாரம் குறித்து பேசிக் கொண்டேஇருக்க வேண்டாம். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் காதலியை வர்ணித்துக் கொண்டிருக்கும் போது, எதையாவது அவர் விரும்பவில்லை என்றால் அதனை மறுபடியும் செய்யாதீர்கள்.

4) சாட்டிங் ஹிஸ்டரி வைத்திருக்க வேண்டாம் செக்ஸ் சாட்டிங் முடிந்த உடன் உடனடியாக அதனை அழித்துவிடுவது நல்லது. மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியிருந்தாலும் அதனை செல்போனில் இருந்து அழித்துவிடுங்கள்.  செக்ஸ் தொடர்பான சேட்டிங் ஹிஸ்டரியை அப்படியே செல்போனில் வைத்திருப்பது நல்லதல்ல.

5) சாட்டிங்கை துவங்கும் முன் நிதானம் தேவை செக்ஸ் தொடர்பான சாட்டிங்கை உங்கள் காதலியுடன் துவங்குவதற்கு முன்பு நிதானம் தேவை. ஏனென்றால் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உங்களுடைய கான்டேக்குகளில் பலருடைய பெயர் இருக்கும். மேலும் உங்கள் காதலி பெயரும் உங்கள் தங்கை பெயரும் ஒன்றாக இருக்கும். உங்கள் காதலிக்கு அனுப்புவதாக கருதி ஆபாச மெசேஜை உங்கள் தங்கைக்கு அனுப்பிவிடலாம். இதனால மிகுந்த தர்மசங்கடம் ஏற்படலாம். எனவே மெசேஜ் அனுப்பும் போது கவனமாக இருக்க வேண்டும்.