வங்க கடலில் தற்போது உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக வரும் 29ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வரும் 27ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறி 29ம் தேதி புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புயலாக மாறினால் வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் விதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி ஈரோடு திருநெல்வேலி மதுரை விருதுநகர் திண்டுக்கல் தேனி சேலம் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக வெப்பசலனம் காரணமாக சேலம் கிருஷ்ணகிரி ஓசூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் உதகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிதாக உருவாக்க உள்ள புயலின் காரணமாக தமிழகத்தில் அடுத்த வாரம் கன மழை வர வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.