Asianet News TamilAsianet News Tamil

ஸ்கூல்ல, என் ப்ரண்ட்ஸ் கேலி பண்ணுறாங்க.. என்னால தாங்க முடியல. அம்மாவிடம் தூக்கு கயிறு கேட்கும் சிறுவன்

தற்போதுள்ள மாணவர்களுக்கு மனதளவில் தைரியத்தை அளிக்கும் கல்வி முறை கற்றுக்கொடுப்பதில்லை. வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு தன்னமிக்கையை கற்றுக்கொடுக்காமல் அவர்கள் மீது பாசத்தை மட்டுமே காட்டுகிறார்கள்.அதன் விளைவு தன் நண்பர்களாக இருந்தாலும் கேலி செய்தால் அதை பொறுத்துக் கொள்ளும் மனநிலை சிறிய குழந்தைகளுக்கு கூட இல்லை என்றே சொல்லும் அளவிற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளி மாணவர் சக மாணவர் ஒருவன் தன்னை கேலி செய்தற்க்காக தன் அம்மாவிடம் தூக்கு கயிறு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

School, my friends mocking .. I can not bear. The boy who listens to his mother
Author
Australia, First Published Feb 22, 2020, 11:21 AM IST

T.Balamurukan

தற்போதுள்ள மாணவர்களுக்கு மனதளவில் தைரியத்தை அளிக்கும் கல்வி முறை கற்றுக்கொடுப்பதில்லை. வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு தன்னமிக்கையை கற்றுக்கொடுக்காமல் அவர்கள் மீது பாசத்தை மட்டுமே காட்டுகிறார்கள்.அதன் விளைவு தன் நண்பர்களாக இருந்தாலும் கேலி செய்தால் அதை பொறுத்துக் கொள்ளும் மனநிலை சிறிய குழந்தைகளுக்கு கூட இல்லை என்றே சொல்லும் அளவிற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளி மாணவர் சக மாணவர் ஒருவன் தன்னை கேலி செய்தற்க்காக தன் அம்மாவிடம் தூக்கு கயிறு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

School, my friends mocking .. I can not bear. The boy who listens to his mother

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யார்ரகா பேலசிடம், நான்காம் வகுப்பு படிக்கும் அவரது, 9 வயது மகன் குவாடன், துாக்கு கயிறு கேட்டு கதறும் வீடியோவை, யார்ரகா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். குவாடனின் தலை பெரிதாகவும், கை, கால்கள் போதிய வளர்ச்சியின்றி, குள்ளமாக உள்ளான்.இதனால், பள்ளியில், சக மாணவர்கள் அவனை கேலி செய்கின்றனர். இதற்காகத்தான் அந்த சிறுவன், தன் அம்மாவிடம், 'தற்கொலை செய்து கொள்ள கயிறு தாருங்கள்' என, கேட்டு அழுதிருக்கிறான்.

School, my friends mocking .. I can not bear. The boy who listens to his mother

அந்த சிறுவனது தாய் பேசும் போது..
'என் மகனை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்ற போது, அவனை, சக மாணவர்கள் கேலி செய்வதை பார்த்தேன். 'ஒருவரை கேலி, கிண்டல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை, பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், இந்த வீடியோவைப் பார்த்து உணர வேண்டும்' என, யார்ரகா பதிவிட்டுள்ளார். 'என் இதயத்தை நானே குத்திக்கொள்ள விரும்புகிறேன்; யாராவது என்னை கொலை செய்து விடுங்களேன்' என, சிறுவன் கதறும் வீடியோ,சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இதயத்தை கனமாக்கிக் கொண்டிருக்கிறது.இந்த வீடியோ உலகத்தை உலுக்கும் வீடியோக்களில் ஒன்றாக இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios