Asianet News TamilAsianet News Tamil

சரவணபவன் மேனஜர் தற்கொலை..! தகாத வார்த்தையால் பேசிய நிர்வாகம்..!

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சாலையில் இயங்கிவருகிறது சரவணபவன் ஹோட்டல். மேலும் சென்னை பெங்களூர் சாலையில் மற்றொரு ஹோட்டல் இருக்கின்றது. 

saravana bavan manager committed suicide in kanjipuram
Author
Chennai, First Published Feb 27, 2020, 4:42 PM IST

சரவணபவன் மேனஜர் தற்கொலை..! தகாத வார்த்தையால் பேசிய நிர்வாகம்..! 

தகாத வார்த்தையில் திட்டியதால் காஞ்சிபுரம் பகுதியில் இயங்கும்  சரவணபவன் ஓட்டல் மேலாளர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சாலையில் இயங்கிவருகிறது சரவணபவன் ஹோட்டல். மேலும் சென்னை பெங்களூர் சாலையில் மற்றொரு ஹோட்டல் இருக்கின்றது. இப்படி மூன்று ஓட்டல் சேர்த்து சுமார் 600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நிலையில் கடந்த இரண்டு மாதங்களாகவே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து மேலாளரிடம் ஊழியர்கள் தொடர்ந்து சம்பளம் பற்றி பேசி உள்ளனர். இது குறித்து நிர்வாகத்திடம் பேசியுள்ளார் மேலாளர். அதன்பின்னர் 5 ஆயிரம் ரூபாயை முன்பணமாக வழங்கியுள்ளார் மேலாளர்.

saravana bavan manager committed suicide in kanjipuram

இதுகுறித்து சென்னை வடபழனியில் உள்ள சரவணா பவன் நிர்வாகம் தொலைபேசி அழைப்பில் தகாத வார்த்தைகள் பயன்படுத்தி திட்டி உள்ளது.இதனால் மேலாளர் பழனியப்பன் இரவு முழுக்க தான் அடைந்த வேதனையை சக ஊழியர் ஒருவரிடம் சொல்லி புலம்பியுள்ளார். பின்னர் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராத காரணத்தினால் கதவை உடைத்து பார்த்தபோது அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தெரியவந்து உள்ளது. பின்னர் இதற்கு காரணம் சரவணபவன் நிர்வாகம்தான் என ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் 

saravana bavan manager committed suicide in kanjipuram

மேலும் அவருக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

saravana bavan manager committed suicide in kanjipuram

ஆனாலும் பணிக்கு செல்லவில்லை. ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுத்த பின்னரே வீட்டிற்கு வேலைக்கு செல்லவும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us:
Download App:
  • android
  • ios