Asianet News TamilAsianet News Tamil

வீட்டை விட்டு வெளியே வந்த சச்சின்..!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் 46 ஆவது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் அவரது வீட்டின் முன் நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

sachin came out his home and got blessings from his fans
Author
Chennai, First Published Apr 24, 2019, 2:42 PM IST

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் 46 ஆவது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் அவரது வீட்டின் முன் நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு  வெளியே காத்திருந்து நேரில் வாழ்த்து கூறவந்த மக்களை ரசிகர்களை சச்சின் டெண்டுல்கர் சந்தித்து பேசினார். அவர்களிடமிருந்து வாழ்த்தினை பெற்றார்.

sachin came out his home and got blessings from his fans

சச்சின் டெண்டுல்கரின் 46 ஆவது பிறந்த நாள் என்பதால் பல்வேறு நாடுகளிலிருந்து இருக்கக்கூடிய அவரது தொண்டர்கள் தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடைய பிறந்த நாள் குறித்த செய்தி  தான், ட்ரெண்டிங் முதலிடத்தில் உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios