அடுத்த ஆப்பு ரெடி..! ஆபாச செயலியும் விரைவில் முடக்கம்..! அதிரடி காட்டும் தமிழக போலீஸ்..!

குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்க்க சமிபத்தில் தடைவிதிக்கப்பட்டது.  அது போன்ற வீடியோக்களை பரப்புபவர்களை போலீசார் லிஸ்ட் போட்டு ஒரு சிலரை கைது செய்து மற்றவர்களை பிடிக்கும் களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பல்வேறு செயலிகள் மூலம் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. உலக அளவில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் அதிக அளவில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்து பின்னர் இது குறித்த முழு விவரம் பட்டியலோடு தமிழக போலீசாருக்கு அனுப்பப்ஏற்பட்டிருந்தது 

அதன்பேரில் ஏடிஜிபி ரவி எடுத்த முயற்சியில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. மேலும் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஒரு தருணத்தில் இந்தி நடிகை ஒருவர் தனது பெயரில்  செயலி அறிமுகப்படுத்தி அதில் தன்னுடைய புகைப்படத்தை மட்டும் முதலில் அப்லோட் செய்துள்ளார். பின்னர் ஆபாச புகைப்படத்தை பதிவு செய்தும் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோக்களை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் பல கோடியில் வருமானத்தையும் பெற்று உள்ளார்

இந்த ஒரு தருணத்தில் அந்த செயலியை இதுவரை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற செயலியை பல நடிகைகள் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்  இதுபோன்ற ஆபாச செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக காவல் துறை கோரிக்கை வைத்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.