ரஜினியை தெறிக்க வைக்கும் ரகளையான ஓப்பனிங் பாடல்: இமானின் எக்ஸ்க்ளூஸிவ் தரலோக்கல் பீட்ஸ்!

*    சிவகார்த்திகேயன் என்னதான் தன்னை மாஸ் ஹீரோவாக சில வருடங்களுக்கு முன்பே நிரூபித்துவிட்டாலும் கூட சில நடிகைகள் அவருடன் இணைந்து நடிக்க மறுத்தனர். இத்தனைக்கும் நயனும், ஹன்ஸியும் அவருடன் இணைந்த போதும் கூட தமன்னா மறுத்துவிட்டார். ஆனால் இப்பொது தமன்னாவுக்கு மார்க்கெட் டல்லாகி, பட வாய்ப்புகள் குறைந்து, அவரின் வயது சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில் ‘சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ஆசை’ என்று ஓப்பனாய் சொல்லியுள்ளார். 
(வாடீ வட இந்திய திருமகளே, என் அம்மாவோட மருமகளே!)

*    ரஜினியின் தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீஸ். கடந்த முறை அவரது பேட்ட படத்துடன், அஜித்தின் விஸ்வாசம் தாறுமாறாக மோதி, பெரும் ரகளையை கிளப்பியிருந்தது. ஆனால் இந்த முறை பெரும் படங்கள் எதுவும் ரஜினியோடு மோதவில்லை. விஸ்வாசத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தரப்பே, தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தையும் தயாரித்துள்ளது. அப்படத்தை தர்பாருடன் மோத வைக்க முடிவெடுத்தது. ஆனல் தனுஷ் ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். 

*    செம்ம கில்லியான இளம் நடிகைகள் யாருமே கோலிவுட்டில் இல்லை! என்று பேசப்பட்ட நிலையில் மேகா ஆகாஷ் கொஞ்சம் நம்பிக்கை தந்தார். ஆனால் பேட்ட படத்தில் டம்மியாகவும், வந்தா ராஜாவாகதான் வருவேன் எனும் ஃபிளாப் படத்திலும் நடித்ததால் அவர் சோபிக்கவில்லை. இந்நிலையில் தனுஷுடன் தான் நடித்து, வெளி வராமல் கிடக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைதான் வெகுவாக நம்பியிருக்கிறார். 

*    கமலின் 60 ஆண்டு கால சினிமா வாழ்வை கொண்டாடும் நிகழ்வுகளில் ஒன்றான ‘உங்கள் நான்’ நிகழ்வில் வடிவேலு செமத்தியாக உலக நாயகனை புகழ்ந்து பேசியதோடு, தேவர் மகன் பட நினைவுகளை சொல்லி ரஜினி, கமல், ஷங்கர் என எல்லோரையும் குலுங்கி சிரிக்க வைத்துவிட்டார். 

கமலுக்காக வடிவேலு இப்படி இறங்கி வந்து பர்ஃபார்மென்ஸ் பண்ண காரணம், அன்று தேவர் மகன் மூலமாக அவருக்கு வாழ்க்கை கொடுத்த கமல் இப்போதும் அவருக்கு ‘தலைவன் இருக்கிறான்’ படம் மூலம் செகண்ட் ரவுண்டு வாழ்க்கை கொடுப்பதால்தானாம். 

*    ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு இசை இமான் தான் என்று முடிவாகிவிட்ட நிலையில், இயக்குநர் சிவாவுக்கு சில டிராக்குகளை போட்டுக் காட்டிவிட்டாராம் இமான். அதில் ரஜினியின் அறிமுக பாடலுக்கான பீட்டு செம தூள் பறக்குதாம். அந்த கால தேவா இசையில் எஸ்.பி.பி.யின் சிம்ம குரலில் ஒலிக்கும் பாடல் போல் ரகளையாக வந்துள்ளதாம் அந்த எக்ஸ்க்ளூசிவ் பீட்டு. சார் இதை கேட்டால் தெறிச்சு போய் ஆடுவார்! என்று குதூகழித்துவிட்டாராம் சிவா. 

-    விஷ்ணுப்ரியா