தமிழ்நாட்டுக்கு ஏன் அப்படி ஒரு சோதனை..! 

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்திற்கு ஓரளவுக்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஃபானி புயல் இன்று காலை 8 மணி அளவில் ஒடிசா மாநிலத்தில் கோபால்பூர் சந்த் பாலி இடையே கரையை கடந்தது.

ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து, அதிதீவிர புயலாக மாறி மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் எதிரொலியாக வங்கக்கடலில் ஒடிசா மாநில கரையோரப் பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்ற என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் பல இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என்றும் சில நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து  உள்ளது.