உங்கள் குழந்தையிடம் "இந்த" அறிகுறிகள் இருக்கா? இருந்தால் அவர்கள் அதி புத்திசாலிகள்..!!
பொதுவாகவே அதிபுத்திசாலியாக இருக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல் இல்லாமல் அவர்களை விட ஒரு படி மேலேயே இருப்பார்கள். அந்த வகையில் உங்கள் குழந்தையும் புத்திசாலிகளாக இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிவதற்கான அறிகுறிகள் இங்கே...
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவார்கள். இன்னும் சொல்லப்போனால் சில குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட சிறு வயதிலிருந்து அதிபுத்திசாலியாகவே இருப்பார்கள். மேலும் மற்ற குழந்தையை விட எப்போதுமே தனித்து காணப்படுவதால், மற்றவர்கள் அக்குழந்தையை அதிசய குழந்தை என்று பார்ப்பார்கள். அந்தவகையில், உங்கள் குழந்தையும் அதிசய குழந்தையா என்று தெரிந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? அதற்கு இத்தொகுப்பில் சில சுலபமான 10 அறிகுறிகள் உள்ளன. அவை உங்கள் குழந்தையிடம் இருந்தால் அவர்களும் அதிபுத்திசாலியான அதிசய குழந்தை என்று நீங்கள் மெச்சிக்கொள்ளலாம்..
குழந்தையின் புத்திசாலி தனத்தை கண்டறியும் 10 அறிகுறிகள் இங்கே..
ஆரம்பகட்ட வளர்ச்சியில் இவர்கள்தான் பெஸ்ட் : பொதுவாகவே, அதிபுத்திசாலியாக இருக்கும் குழந்தை மற்ற குழந்தைகளை விட எல்ல விஷயத்திலும் ஒருபடி மேலே இருப்பார்கள். இதனை அவர்கள் சிறுவயது முதலே வெளிப்படுத்துவார்கள். இதில் நீங்கள் ஆச்சரியப்படும் மற்றோரு விஷயம் என்னவெனில், இவர்கள் குழந்தையாக இருக்கும் போதே மற்றவர்களை விட சீக்கிரமாகவே பேசவும், நடக்கவும் செய்வார்கள். அதுமட்டுமின்றி, மற்ற குழந்தைகளைவிட இவர்கள் வாசிப்பு திறனை விரைவாக கற்றுக் கொள்வார்கள்.
இதையும் படிங்க: உங்கள் குழந்தையிடன் "இந்த" அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருங்கள்..! மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம்!
எதையும் சீக்கிரமாக கற்றுக் கொள்வது: இவர்கள் மற்ற குழந்தைகளைப் போல் இல்லாமல் எந்த ஒரு புதிய விஷயங்களையும் சீக்கிரமாக கற்றுக் கொள்ளும் திறமை இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். சொல்லப்போனால் தங்களது வயசுக்கு மிஞ்சிய விஷயங்களை கூட அதுவும் சிக்கலான விஷயங்களை கூட மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் திறமை இவர்களுக்கு உண்டு.
இதையும் படிங்க: குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல் சொல்பேச்சை கேட்க இதை ஃபாலோ பண்ணுங்க..!!
எந்தவொரு விஷயத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கும்: இவர்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடம் அல்லது திறனில் தங்களது அதீத ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள். எப்போதுமே அவற்றில் தங்களது முழு கவனத்தையும் செலுத்துவார்கள்.
சொற்களில் வித்தகர்கள்: இவர்கள் தங்களது சிறுவயதில் இருந்தே சிக்கலான வார்த்தைகள் கொண்ட சொற்களை கூட மிகவும் சுலபமாக உச்சரிப்பார்கள். அதுமட்டுமின்றி இவர்கள் தங்களது வயதுக்கு மிஞ்சிய வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்கள்.
ஞாபக சக்தி அதிகம்: பொதுவாகவே அதிபுத்திசாலியாக இருக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். இவர்கள் எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவே மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் படிக்கும் பாடத்தில் கூட சிக்கலான விஷயங்களை மிகவும் எளிதாக ஞாபகம் வைத்திருப்பார்கள்.
படைப்புத்திறன்: இவர்கள் தங்களது சின்ன சின்ன விஷயங்களில் கூட புதுமையான தீர்வுகளை கண்டுபிடித்து, தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள். சொல்லப்போனால் இவர்களிடம் வயதுக்கு மீறிய படைப்பு திறன் அதிகமாகவே இருக்கும்.
ஆர்வம் அதிகம்: பொதுவாகவே அது புத்திசாலியாக இருக்கும் குழந்தைகள் எப்போதுமே ஆழமான சிந்தனை மற்றும் பலவிதமான தூண்டும் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
பிரச்சனையை தீர்ப்பதில் வல்லவர்கள்: எந்த ஒரு பிரச்சனையும் சிக்கலில்லாமல் தீர்க்கும் திறன் இவர்களுக்கு உண்டு. மற்ற குழந்தைகளுக்கு சிக்கலை தீர்ப்பது பெரும் சவாலாக இருக்கும் ஆனால் இவர்களுக்கு அது ரொம்பவே சிம்பிளாக இருக்கும்.
நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்: இந்த மாதிரி அதிபுத்திசாலியாக இருக்கும் குழந்தைகள் தாங்களது சிறு வயதிலேயே குறிப்பிட்ட பாடம் அல்லது திறனில் முழு நிபுணத்துவம் கொண்டிருப்பார்கள். இன்னும் சொல்லபோனல் இவர்கள் சில விஷயங்களில் தங்களை விட வயது முத்தோர்களைக் காட்டிலும் நிபுணத்துவமாக இருபார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சிறந்த குணம்: பொதுவாகவே அது புத்திசாலியாக இருக்கும் குழந்தைகளிடம் இரக்கம் கருணை போன்ற குணங்கள் காணப்படும். இவர்கள் எப்போதுமே அதிக உணர்ச்சியோடு இருப்பார்கள் இன்னும் சொல்லப்போனால் இவர்கள் மற்றவர்களிடம் பழகும் போது மிகவும் அன்பாக பழகுவார்கள்.