"ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும்"..அதுவும் எந்த வாகனத்தை எடுத்து செல்ல கூடாது தெரியுமா? 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், விவரமறியா மக்கள் கூட மக்கள் அத்தியாயவாசிய பொருட்களை வாங்கவும், மருந்து மாத்திரைகளை வாங்கவும், மருத்துவமனை செல்லவும் மட்டுமே வெளியில் வருகின்றனர்.

ஆனால் ஒருசிலர்... அவர்கள் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்கிற பாணியில் தேவை இல்லாமல் வெளியில் சுற்றுவதை பார்க்கும் போது போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்புகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிந்தால் அவர்களை கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள்" என குறிப்பிட்டு இருந்தார்.

மக்கள் அனைவரும் அரசுடன் கைகோர்த்து ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே... இந்த கொரோனாவை  எதிர்த்து போராடி வெல்ல முடியும் என குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் அரசுடன் கைகோர்த்து செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை எதிர்த்து போராடி வெல்ல முடியும் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அரசும் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கொரோனா அபாயம் குறித்து தெளிவாக விளக்கி வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரவலாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் விவரம் அறியா மக்கள் கூட புரிந்து கொள்ளும் அளவுக்கு ஆட்டோ உள்ளிட்ட ஒருசில வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் ஆங்காங்கு மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரெக்கார்டு வாய்ஸ் ஒலிக்கின்றன.

மேலும் நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமம் கிராமமாக சென்று பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர் அதில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே யாரேனும் ஒருவர் வெளியே செல்லலாம் என்றும், குறிப்பாக இருசக்கர வாகனங்கள் வாகனத்தில் செல்லலாம். ஆனால் மற்றவர்களை அழைத்து செல்லும் வசதி கொண்ட ஆட்டோ அல்லது கார் போன்றவற்றில் செல்வது கூடாது குறிப்பாக காலை 9 மணி முதல் 12 மணி வரையில் சென்று விட்டு வீடு திரும்ப வேண்டும் என பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளது. இருந்தபோதும் இன்றும் கொரோனா அபாயம் புரியாமல் வெளியில் நடமாடுவதை பார்க்க முடிவதால், போலீஸ் அதிக கெடுபிடி விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.