இந்தியாவில் 592 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 10 தாண்டி  உள்ளது. இந்த நிலையில்  நேற்று பிரதமர் மோடி இன்று முதல் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார் .

ஆனால் மக்களுக்கு தேவோயான அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள், பால், இறைச்சி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு நிலையில் மேலும் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்144 தடை உத்தரவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தனது டெலிவரி சேவையைத் நிறுத்தி உள்ளதுஇது ஒரு பக்கம் இருக்க அமேசான் தனது சேவையை தொடர்ந்து அளித்து வருகிறது மேலும், அத்தியாவசிய பொருட்களின் சேவை இருக்கும் என தெரிவித்து உள்ளது

மேலும் மார்ச் 24 ஆம் தேதிக்கு முன்னர் ஆர்டர் செய்த எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள், நகைகள், அலங்காரப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை அமேசான் நிறுவனம் டெலிவரி செய்யாது என தெரிவித்து உள்ளதால் வாடிக்கையாளர்கள் கேன்செல் செய்து அதற்கான தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.இது ஒரு பக்கம் இருக்க, எப்படியும் மக்களுக்கு தேவையான  அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதில்  எந்த மாற்றமும் கிடையாது. எனவே மக்கள் நாம் அனைவரும் செய்ய வேண்டியது வீட்டில் இருந்தபடியே தங்களை தனிமை படுத்திக்கொள்வது தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஒரு நிலையில், அவசரத்திற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்தாலும் அதனை பெரும் போது, உடனடியாக  கைகளை கழுவதுதல் வேண்டும் என்பதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.