165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அதிர்ச்சி..! 

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில் 165 பள்ளிகளில் எந்த ஒரு மாணவர் மாணவியர் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் குறிப்பாக 165 பள்ளிகளில் உள்ள எந்த ஒரு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. இது தவிர 385 பள்ளிகளிலும் மிக மிக குறைவான தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது வெறும் 20% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னதாக அங்குள்ள பல்வேறு பள்ளிகளில் காப்பி அடிக்க அதிக வாய்ப்பு இருந்ததாகவும் தற்போது அதிக கெடுபிடி வைத்து தேர்வு நடத்தப்பட்டதால் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டுமல்லாமல் கௌசாம்பி என்ற இடத்தில் உள்ள 13 பள்ளிகளில் எந்த ஒரு மாணவ மாணவியும் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அலிகார் மணிப்பூரில் உள்ள சுமார் ஏழு பள்ளிகளில் ஜீரோ சதவீத தேர்ச்சியே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.