இருமனம் இணையும் திருமணங்களில் நம்பிக்கை, அன்பு, மரியாதை, நேர்மை. இவை எல்லாவற்றிலும் சரியாக இருந்தும் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க பிரம்ம பிரயத்தனப்பட வேண்டியிருப்பது தவிர்க்க முடியாதது. 

ஆண் தன்னுடன் இணையும் பெண்ணின் எதிர்பார்ப்புகள், தேவைகள், ஆசைகளை நிச்சயம் புரிந்து வைத்திருக்க வேண்டும்.  இது காதலை வலுப்படுத்துவதோடு புரிதலையும் அதிகரிக்கிறது. மனைவி வாயைத் திறந்து ஏதும் சொல்லாவிட்டாலும் அவரது மவுன மொழியைக் கூட புரிந்துகொண்டு மகிழ்விப்பது உன்னதமானது. ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட ஆசைகள் மிகவும் முக்கியமானவை. திருமண வாழ்வில் தனது தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற கணவன் முக்கியத்துவம் அளிக்கும்போது பெண்ணின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

இதோ பெண்கள் தங்கல் கணவர்களிடம் எதிர்பார்க்கும் 5 அம்சங்கள் 

பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதால் அவர்களுக்கு அன்பு என்பது மிகவும் முக்கியமானது என்னதான் மனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் அதில் ஒரு அன்போ ஈடுபாடோ இல்லாமல் இருந்தால் பெண்களின் மனதில் அது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிடும். 

கணவனுடன் மனைவி எப்போது ஒரு மனப்பூர்வமான தொடர்பில் இருக்க விரும்புவார். இருவரும் இணைந்து தினசரி நடவடிக்கைகள் கடந்த காலம், எதிர்காலத் திட்டங்களை பேச ஆக்கபூர்வமான உரையாடல் தேவைப்படுகிறது இது நட்பையும் புரிதலையும் அதிகரிக்கிறது.

நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை மனைவி கணவனிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறல்ல. துணை தன்னிடம் நேர்மையாக இருக்க எண்ணுபவர்கள் தாங்களும் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். கணவனே உலகம் என எண்ணும் பெண்கள், அவர் தன்னிடம் வெளிப்படையாக இருப்பதையும் விரும்புகின்றனர். எப்போதும் திறந்த மனதுடன் மனைவியை அணுகுவது அவரது காதலை தொடர்ந்து மேம்படுத்தும்.

பொருளாதார ரீதியாக எல்லாவற்றுக்கும் கணவரை சார்ந்திருப்பது பெண்களின் மனநிலையை பாதிக்கிறது. எனவே பெண்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பொருளாதார சுதந்திரம் கொடுப்பது அவசியம்.

திருமணத்தின் மூலம் பெண் பிறந்தது முதல் இருந்த உறவை பிரிந்து வருகிறார் என்பதால் அந்தக் குடும்பம் குறித்த கவலை இருக்கும் அவர்கள் பிரிந்து வந்த பெற்றோர், நண்பர்கள் உள்ளிட்டோரை அடிக்கடி சந்திக்க செய்வது மனைவியின் நண்பர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்வது தங்கள் உறவுகளைப் போன்றே மனைவியின் உறவுகளையும் விரும்பிக் கவனிப்பது உள்ளிட்டவை காதல் வாழ்வில் சுவையைக் கூட்டும்.