Asianet News TamilAsianet News Tamil

உஷார்..! இந்த உணவு பொருட்களை சாப்பிட்டால் "ஆண்மை அவுட்"...!

நம்மால் முடிந்தது அட்லீஸ்ட் ஒரு சில உணவுப்பொருட்களை தவிர்த்தாலே ஆண்மை குறைவு என்ற ஒரு பிரச்சினைக்கு சற்று தீர்வு ஏற்படும் என நம்பலாம். 

need to  avoid some food items to prevent impotence issues
Author
Chennai, First Published Dec 10, 2019, 6:27 PM IST

உஷார்..! இந்த உணவு பொருட்களை சாப்பிட்டால் "ஆண்மை  அவுட்"...!

உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனை என்றாலும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் குறிப்பாக ஆண்கள் பொதுவாகவே பாதிக்கப்படும் விஷயம் என்னவென்றால் ஆண்மை குறைவு என்ற ஓர் பிரச்சினைதான். 

அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட ஒரு சில உணவுப் பொருட்கள் மிக முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் கலப்பட உணவு தான் நாம் உண்கிறோம். இன்னொருபக்கம் எப்போதும் காசு பணம் துட்டு மணி மணி என வேலைக்கு சென்று வருவதும் வீட்டிற்கு வந்தாலும் நிம்மதியாய் இருக்க முடியாமல் கிடைப்பதை உண்டு நேரம் கிடைக்காமல் தூங்க முடியாமல் நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்து வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

need to  avoid some food items to prevent impotence issues

இந்த ஒரு தருணத்தில் நம்மால் முடிந்தது அட்லீஸ்ட் ஒரு சில உணவுப்பொருட்களை தவிர்த்தாலே ஆண்மை குறைவு என்ற ஒரு பிரச்சினைக்கு சற்று தீர்வு ஏற்படும் என நம்பலாம். அதில் குறிப்பாக சிக்கனில் அதிக புரதம் உள்ளது. மேலும் ஒரு முறை அதனை சூடுபடுத்தி உண்டால் அதில் உள்ள புரதம் மேலும் அதிகரித்து ஆண்மைக் குறைவு ஏற்பட வழிவகை செய்து விடும்.

need to  avoid some food items to prevent impotence issues

இன்னொரு பக்கம் கீரையில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் இருப்பதால் அதனை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதில் உள்ள நைட்ரேட் மற்றும் இரும்புச்சத்தின் காரணமாக மீண்டும் சூடுபடுத்தும் போது புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக முட்டையில் அதிக புரதச்சத்து இருக்கிறது. அதனை வேக வைத்து விட்டு ஓடுகளை எடுக்க மறந்து பின்னர் சூடாக வேண்டுமென்பதற்காக மீண்டும் ஒருமுறை கொதிக்க விட்டால் அதில் உள்ள புரதம் அதிகரித்து பலவிதமான கெடுதலை ஏற்படுத்தும் மற்றும் உருளைக்கிழங்கு பீட்ரூட் உள்ளிட்ட காய் வகைகளிலும் பிரிட்ஜில் வைத்து சாப்பிட கூடாது. இவ்வாறு உண்பதால் ஆண்மைக் குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஒரு சில விஷயத்தையும் ஒருசில உணவுப் பொருட்களை அறவே தவிர்த்து வந்தால் ஆண்மை குறைவு என்ற ஒரு பிரச்சினைக்கு மிக எளிதாகத் தீர்வு காணலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios