வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி காசி விஸ்வநாதர் ஆசியுடன் தான் மீண்டும் வெற்றி பெறுவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தன் சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி தொகுதியிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றார். அதில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 128 வாக்குகள் அதிகம் பெற்று நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மோடி.

பின்னர் வதோதரா தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு வாரணாசி தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டார். 80 எம்பி தொகுதியை கொண்டுள்ள உத்திரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெறவே வாரணாசியை தேர்வு செய்துள்ளார் மோடி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. 

ஆனால் மோடியோ வாரணாசி தொகுதிக்கு தான் செய்த நலத்திட்ட பணிகள் மற்றும் மக்கள் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கை இவை இரண்டும் என்னை மேலும் வெற்றி அடைய செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

வாரணாசியில் மோடிக்கு எதிராக ராகுலின் சகோதரி பிரியங்கா போட்டியிட திட்டமிட்டிருந்த காங்கிரஸ் தற்போது அதில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதன் மூலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் மோடி வருவார் என உறுதி செய்துள்ளனர் மக்கள். வரலாற்று சிறப்புமிக்க காசி நகரம் என அழைக்கப்படும் வாரணாசி விஸ்வனாதர் ஆசியுடன் மாபெரும் வெற்றி அடைவேன் என வேட்புமனு தாக்கல் செய்த கையோடு மோடி தெரிவித்து உள்ளார்.