ஃபானி புயலின் கோர தாண்டவத்தில் ஒடிசாவே சிதைந்து காணப்படும் நிலையில் பிரதமர் மோடியின் உருவம் பதிந்த பேனர் மிக உறுதியாக கம்பீரமாக தோற்றமளிக்கிறது. 

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தை விட பல மடங்கு அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளது ஃபானி புயல். ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடந்த ஃபானி புயல் ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் ருத்ர தாண்டவம் ஆடி உள்ளது.

மணிக்கு சுமார் 175 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அதிவேக சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. மின் கம்பங்கள் கீழே விழுந்துள்ளது.

வாகனங்கள் சேதம் அடைந்து உள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பார்க்கும்போதே சின்னாபின்னமான தோற்றமாக காணப்படுகிறது.

இவ்வளவு சேதாரம்  பிரதமர் மோடியின் உருவம் பதியப்பட்ட பேனர் கிழியாமல் உறுதியாக தோற்றமளிக்கிறது. பிரதமர் மோடியின் படம் மட்டும் நன்றாக தெரிகிறது. இதனால் கண்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஃபானி புயலிலும் கிழியாத மோடி முகம் என கூறி சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் செய்கின்றனர்.