ஆஹா .. "நாம் எதிர்ப்பார்த்ததை" சொல்லிவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்! நல்ல செய்தியால் உள்ளம் குளிர்ந்த மக்கள்..! 

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாதக் குழந்தை நலமாக உள்ளது என  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சமூக தொற்றை தடுப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1400-ஐ கடந்துவிட்டது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும்போதிலும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பில் இரட்டை சதத்தை நெருங்கிவிட்ட நிலையில், கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 176ஆக உள்ளது.

கர்நாடகாவில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு 70 ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் ஈரோட்டில் 10 மாத குழந்தை உட்பட மொத்தம் 8 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு நிலையில் கொரோனாவிற்கு கோவையில் சிகிச்சை பெற்று வந்த10 மாத குழந்தை நலமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களின் சந்திப்பின் போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது என்ற செய்தி தொடர்ந்து பார்க்க முடிந்தது. இந்த ஒரு தருணத்தில் மக்கள் எதிர்பார்க்கும் ஓர் நல்ல செய்தியாக இது அமைந்து விட்டது.