Asianet News TamilAsianet News Tamil

Face pack: உங்கள் முகத்திற்கு பால் போன்ற வெள்ளை அழகு வேண்டுமா? பால் பவுடர் ஃபேஸ் பேக் ஒருமுறை ட்ரை பண்ணுங்கோ..

கருப்பு பேரழகா, அடி கருப்பு நிறத்தழகி, கருப்புதான் எனக்கு பிடித்த அழகு என்றெல்லாம் பீத்தி கொண்டாலும், வெள்ளை தான் அழகு என்பதை வெள்ளைக்காரர்கள் நம்முடைய ஆழ் மனதில் பதிய வைத்து விட்டு சென்று விட்டார்கள். எனவே, அதை அடையவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். 

Milk powder face pack tips
Author
Chennai, First Published Feb 28, 2022, 8:42 AM IST

கருப்பு பேரழகா, அடி கருப்பு நிறத்தழகி, கருப்புதான் எனக்கு பிடித்த அழகு என்று பீத்தி கொண்டாலும், வெள்ளை தான் அழகு என்பதை வெள்ளைக்காரர்கள் நம்முடைய ஆழ் மனதில் பதிய வைத்து விட்டு சென்று விட்டார்கள். எனவே, அதை அடையவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். 

Milk powder face pack tips

அதற்கு, ஆதரவளிப்பது போல் பல்வேறு விளம்பரங்களும் மிகைப்படுத்தி காட்டுகின்றார். கண்ட..கண்ட கெமிகல் நிறைந்த காஸ்மெட்டிக் பொருட்களை காசு கொடுத்து வாங்கி ஏமார்ந்து போகின்றனர். இனிமேல், நீங்கள் வெள்ளையாக வேண்டும் என்று ஆசை இருந்தால், வீட்டில் இருக்கும் பால் பவுடர்  உள்ளிட்ட பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் செய்து ஈஸியான முறையில் வெள்ளையாக முயற்சி செய்யலாம். ஒருமுறை நீங்கள் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

Milk powder face pack tips

எல்லா மளிகை கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கக்கூடிய ஈஸியான பொருட்கள் தான்...

தேவையான பொருட்கள்:

பால்பவுடர்  -1 ஸ்பூன் 

அரிசி மாவு - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு  - 1 ஸ்பூன் 

எலுமிச்சம்பழம் -1 

Milk powder face pack tips

செய்முறை:

1. பால் பவுடர், அரிசி மாவு, எலுமிச்சை பழச்சாறு, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் ஊற்றி தேவைக்கு ஏற்ப கலந்து கொள்ளுங்கள். 

2. முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவி துடைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த பால் பவுடர் பேக்கை உங்களுடைய முகம் கழுத்து எல்லா இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து விடுங்கள்.

3. 20 நிமிடங்கள் இந்த பேக் அப்படியே வைத்து இருங்கள். அதன் பின்பு முகத்தை தண்ணீரில் லேசாக தேய்த்து கழுவிப் பாருங்கள். முகம் அவ்வளவு பொலிவாக இருக்கும்.

4.  இறுதியாக முகத்தை ஐஸ் கியூபை கொண்டு ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் இன்னும் பிரஷ்ஷாக மாறும். முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் வெளிவந்து இருக்கும்.வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு, ஒரு நாள் இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வரும் போது உங்களுடைய சருமத்தின் நிறம் கூடிக்கொண்டே செல்லும்.

Milk powder face pack tips

பின் குறிப்பு:

ஒருவேளை உங்களுக்கு எலுமிச்சை பழச்சாறு ஒத்துவராது என்றால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டாம். ரோஸ் வாட்டர் கலந்து கொண்டாலே போதும். அரிசி மாவு உங்கள் வீட்டில் இல்லை என்றால் கடலை மாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இவை தொடர்ச்சியாக செய்து வந்தால், நீங்கள் பால் போன்ற வெள்ளை நிறம் மாறுவதுடன். முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் வெளியேறி உங்களுடைய முகம் பிரகாசமாக இருப்பதோடு, முகத்தில் இருக்கும் தழும்புகள் படிப்படியாக குறையத் தொடங்கும். இத கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க பாஸ்!

Follow Us:
Download App:
  • android
  • ios