மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே..!

எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு தேவையான பணம் உங்களை வந்தடையும். புதிய டிவி மிக்ஸி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவுகளும் அதிகரிக்கக்கூடும். உங்களுடைய பழைய நண்பர் நேரில் வந்து சந்திப்பார்.

ரிஷப ராசி நேயர்களே...!

நீங்கள் செய்துவரும் செயலில் அதிக ஆர்வம் காண்பிக்க கூடும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாங்க திட்டமிடுவீர்கள்

மிதுன ராசி நேயர்களே..! 

இழுபறியாக இருந்து வந்த பல வேலைகளை திடீரென முடியும் தருணம் உண்டாகும். குடும்பத்தில் பல சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல ஒரு முடிவு கிடைக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த வகையில் பணம் வந்து சேரும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வு காண கூடும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கு சில ஏற்பாட்டை செய்வீர்கள். பிரபலமானவர்கள் உங்களுடைய நட்பை தேடி வருவார்கள்.

சிம்மராசி நேயர்களே...!

 உங்களுக்கு இன்று பதற்றமான ஒரு சூழல் ஏற்படும். வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சில கருத்து வேறுபாடு ஏற்பட கூடும். அரசு விவகாரங்களில் அவசரம் வேண்டாம். சொந்த பந்தங்களின் அன்புத்தொல்லை எப்போதும் இருக்கும்

கன்னி ராசி நேயர்களே..!

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு.

துலாம் ராசி நேயர்களே...!

உங்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். எங்கு கேட்டாலும் பணம் ஈசியாக உங்களுக்கு கிடைக்கும். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். திடீர் பயணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.