மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!  

மேஷ ராசி நேயர்களே...!

இன்று கொஞ்சம் அலைச்சல் ஏற்படும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. மனைவிவழி உறவினர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் வாங்கி மகிழக்கூடிய நாள் இது. நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பல விஷயங்களில் சுமுகமான தீர்வு ஏற்படும்.

மிதுன ராசி நேயர்களே..!

உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்பு நீங்கும் உங்களது மேலதிகாரியின் ஆலோசனைப்படி, பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள், எதிர்பாராதவிதமாக உங்களுடைய பழைய நண்பரை சந்தித்து சந்தோஷம் அடைவீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருந்த சில காரியங்கள் விரைவில் முடியும். பிரபலமானவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும் நாள் இது.

சிம்ம ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பணத் தட்டுப்பாடும் காணப்படும். அரசு காரியங்களில் எடுத்த வேலையை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத விதமாக சில செலவுகள் வந்து போகும்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுடைய பழைய நண்பர்களால் வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவிற்கு பணவரவு தாராளமாக அமையும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய தொடர்பு விரிந்துகொண்டே செல்லும்.