மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!

மேஷ ராசி நேயர்களே..! 

உங்களுடைய கடின உழைப்பை வெளிக்கொண்டுவரும் நாள். உங்களுடைய திறமையான பேச்சால் பல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மனப்போராட்டம் அதிகமாக இருந்தாலும், முடிவில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே.! 

நீங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பணம் இன்று உங்களை வந்தடையும். உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பல சுப காரியங்கள் நடைபெற இருப்பதால் அதற்காக பணம் செலவிடுவதை   திட்டமிட்டு வருவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

உங்களுக்கு இன்று செலவு அதிகரிக்க நேரிடலாம். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். பணப் பற்றாக்குறையை சமாளிக்க நிறைய வழியை தேடி அலைவீர்கள். உறவினர்கள் உதவி செய்ய முன் வருவார்கள்.

கடக ராசி நேயர்களே...! 

நகை ஆபரணங்கள் வந்து சேரும். வீடு வாகனம் வாங்க திட்டம் போடுவீர்கள். உங்களை தேடி உங்களது உறவினர்கள் வருவார்கள்.

சிம்ம ராசி நேயர்களே..!

செலவுகளை குறைப்பது நல்லது. சேமிக்கும் அளவிற்கு வருவாய் ஈட்ட வேறு என்ன செய்ய வேண்டும் என திட்டமிடும் நாள் இது. உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுடைய மதிப்பு நாளுக்கு நாள் வெளிவட்டாரத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கும். மரியாதை கூடும் நண்பர்கள் உறவினர்கள் உங்களை மதிக்க செய்வார்கள். தாயாரின் உடல் நிலையில் அக்கறை தேவை.