மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே...!

மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும்  என நினைத்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். உங்கள் பிள்ளைகளால் மதிப்பு அதிகரிக்கும்.

மிதுன ராசி நேயர்களே..!

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்க போராடுவீர்கள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

முக்கிய வேலைகளை விரைந்து முடிக்க முற்படுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிந்து அவர்களுடன் பழக முயற்சி செய்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சேர்ந்து நிறைவேற்ற செல்வீர்கள்.

சிம்மராசி நேயர்களே..!

சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். புதிய கோணங்களில் சிந்தித்து பல சிக்கல்களுக்கு முடிவு காண்பீர்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கக் கூடும்.

கன்னி ராசி நேயர்களே..!

சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையால் உங்களுக்கு களை கட்டும் நாள் இது