தன்னை விரும்பும் பெண் முன், வீரனாகக் காட்டிக் கொள்வான் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால், தான் உண்மையாக நேசிக்கும் பெண்ணிடம் ஆண் தனது அச்சம் குறித்தும், எதன் மீதெல்லாம் பாதுகாப்பின்மை உணர்வு இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்திவிடுவான். அதிகமாக சண்டையிட்டுக் கொள்ளும் ஜோடி ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பார்கள். சண்டையிட்டுக் கொண்டு நாள். வார, மாதக் கணக்கில் கூட பேசிக்கொள்ளாமல் இருப்பார்கள். 

ஆனால், கோபத்தில் வன்மமோ, வக்கிரமோ இருக்காது. ஆபாசமாக திட்டுவது இருக்காது. அந்த கோபத்தின் வெளிப்பாடு அந்த பெண் மீதான அக்கறையாக இருக்கும். பெண் திட்டுவதை பாசம் மற்றும் அக்கறையின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்வான் தான் காதலிக்கும் பெண் தான் தனது உலகமாக கருதுவான். நேசிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவளது குடும்பத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக தனது குடும்பமாக பாவிக்க தொடங்கிவிடுவான்.

 

தான் நேசிக்கும் பெண் வெற்றிபெறுவதை, தானே வெற்றி பெறுவதாக கருதுவான். மனைவியின் வெற்றி ஈகோ அல்லது பொறாமையை அளித்தால் உண்மையாக காதலிக்கவில்லை என்று அர்த்தம். விரும்பும் பெண்ணின் எதிர்பார்ப்பு, ஆசைகளை மெய்ப்பிக்க உதவுவான். அவளை அதை சார்ந்து ஊக்கப்படுத்துவான்... அவளது கனவுகள் நிறைவேற  எதை வேண்டுமானாலும் செய்வான்.

வாழ்க்கை என்பது எதற்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கிறோம், எதை தவிர்க்கிறோம் என்பதை சார்ந்து அமைகிறது. உண்மையாக நேசிக்கும் ஒரு ஆண், தனது முடிவுகள், தன் வாழ்க்கையை மட்டுமின்றி, தான் நேசிக்கும் பெண்ணின் வாழ்க்கையிலும் எத்தக்கைய தாக்கத்தை ஏற்படுத்தும் என யோசித்து தான் முடிவு செய்வான்.

 

அவளது மகிழ்ச்சி தான் இவனது மகிழ்ச்சியாக அமையும். அவள் புன்னகையில் தான் இவனது இன்பம் நிறைந்திருக்கும். அவளது நிம்மதி இவன் வாழ்வில் ஒரு பெரும் அர்த்தம் கொண்டிருக்கும். தன் சக்திக்கு முடிந்த அளவில் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வான். அவள் ஒவ்வொருமுறை மகிழ்ச்சியடையும் போதும், இவன் வானில் புதியதாய் ஒரு வெண்ணிலவு தோன்றும்.