தொடர்ச்சியாக சுய இன்பத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்றும் ஒரு கட்டத்தில் ஆண்மை இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள் என்றும் ஒரு கருத்து சமூகத்தில் நிலவுகிறது. உலகில் வாழும் ஆண்களில் 90 விழுக்காட்டினர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சுய இன்பம் செய்கிறார்கள் என்பது தான் உண்மை. இவர்களில் 80 சதவீதம் பேர் சுய இன்பத்தை தொடர்வதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சுமார் 20 சதவீதம் பேர் தினந்தோறும் சுய இன்பம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சுய இன்பம்குறித்த புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. 

தமிழகத்தை எடுத்துக் கொண்டோம் என்றால் கூட சுய இன்பம் குறித்து தற்போது ஆண்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் கூட சுய இன்பம் குறித்து இட்டுக் கட்டி கூறப்பட்ட பல்வேறு கருத்துகளை உண்மை என்று கருதி, மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பாலியல் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழலில் ஆண்கள் தேடிச் செல்வது தான் சுய இன்பம். அதிலும் பேச்சுலர்களாக இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் சுயஇன்பத்தையே தங்களின் துணைவனாக கொண்டிருக்கின்றனர். 

இப்படிப்பட்டவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும் போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. அதாவது திருமணம் நிச்சயம் செய்த உடனேயே சுய இன்பத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவுக்கு வருவார்கள். நிச்சயமாக நிறுத்தினால் நல்லது தான். ஆனால் சுய இன்பத்தை இவ்வளவு நாள் அனுபவித்தவர்களால் உடனடியாக அதனை நிறுத்த முடியாது. இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாவார்கள். பின்னர் மன அழுத்தம் ஏற்படும். ஒரு கட்டத்தில் தவறான மருத்துவரை நாடும் போதோ, அல்லது தவறான கட்டுரைகளை படிக்கும் போதே இவ்வளவு நாள் சுய இன்பம் செய்தாயா? உனக்கு ஆண்மை குறைந்திருக்கும் என மருத்துவர்கள் சொல்லும் போது பீதிக்கு ஆளாவார்கள். 

ஆனால் சுய இன்பம் செய்வதால் நிச்சயமாக யாருக்கும் ஆண்மை குறையாது. ஏனென்றால் ஆண்மை என்று இங்கு கூறப்படுவது உங்கள் மனைவியுடன் நீங்கள் உடலுறவு கொள்ளும் போது உங்களது உறுப்பில் ஏற்படும் விறைப்புத்தன்மை மற்றும் உச்சகட்டத்தில் நீங்கள் வெளியேற்றும் விந்து. இந்த இரண்டும் தான். உங்கள் மனநிலை தெளிவாக இருந்தால் போதும், உங்களது விறைப்புத்தன்மை மற்றும் விந்து வெளியேற்றத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 

ஆனால் நீங்கள் சுய இன்பம் செய்வதால் விறைப்புத்தன்மை ஏற்படாது மற்றும் விந்து இருக்காது என்று கவலைப்பட்டீர்கள் என்றால் உங்களால் உங்கள் மனைவியுடனான செக்சில் ஈடுபட முடியாது. நிச்சயமாக இதற்கு காரணம் நீங்கள் சுய இன்பம் செய்து இல்லை. சுய இன்பம் குறித்த உங்கள் தவறான எண்ணம் தான். மேலும் தொடர்ந்து சுய இன்பம் செய்வதால் உங்களுக்கு விந்து வெளியேறும் அளவு வேண்டுமானால் குறையும்.  

ஆனால் தொடர்ந்து 2 வாரங்களுக்கு சுய இன்பம் செய்யாமல் நீங்கள் செக்சில் ஈடுபடும் போது போதுமான அளவிற்கு விந்தணு வெளியேறும். மேலும் உங்கள் உறுப்பு விறைப்பு என்பது சுய இன்பம் சார்ந்தது அல்ல, உங்கள் மனம் சார்ந்தது. மனைவியுடன் முன்விளையாட்டை விரப்படுத்தும் போது இயல்பாகவே உங்கள் உறுப்பு விறைத்து செக்சுக்கு தயாராகிவிடும். எனவே தொடர்ந்து சுயஇன்பம் செய்வதால் ஆண்மையை இழக்க நேரிடும் என்பது உண்மை அல்ல. எதையும் அளவாக வைத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை.