ஜியோஅதிரடி..! ரூ.600 மட்டுமே ...! 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் ரூ 600 இல் பிராட்பேண்ட், தொலைக்காட்சி, தொலைபேசி வசதிகள் அனைத்தையும் வழங்க ஒரு அற்புத திட்டத்தை அறிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்கு பிறகு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அடிமேல் அடி என்றே கூறலாம். அந்த அளவிற்கு நஷ்டத்தை சந்தித்தது உதாரணத்திற்கு ஏர்செல் நிறுவனம் அதிக அளவில் நஷ்டத்தைச் சந்தித்ததால் அவர்களால் சேவை வழங்க முடியாமல் போனது. 

இந்த நிலையில் சோதனை அடிப்படையில் கிகாபைபர்' திட்டம் மூலம் டிவி, தொலைபேசி, பிராட்பேண்ட் இவை மூன்றையும் நாடு முழுவதும் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 ஆயிரத்து 500 ரூபாய் டெபாசிட் பணம் வசூலிக்கப்படும் என்றும், இதன் மூலம் வினாடிக்கு 100 மெகா பைட் வேகத்தில் 100 ஜிபி வரை பதிவிறக்கம் செய்துக்க கொள்ளலாம். 

இது தவிர தொலைக்காட்சி, மின் விசிறி போன்ற மின்னணு சாதனங்களையும் இந்த திட்டம் மூலம் இயக்குவது உள்ளிட்டவற்றை  செயல்படுத்த முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. இதற்காக அதுவே, ஹாத்வே கேபிள், டேடா காம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்து உள்ளது ஜியோ நிறுவனம்.தற்போது ரிலையன்ஸ் ஜியோ கேபிள் டிவி சேவையை வழங்கி வருவதால், இதன் மூலம் 27 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்களை வைத்து ஆயிரத்து 1,100 நகரங்களை கவர் செய்ய உள்ளது. 

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், ஒரு வருடத்திற்கு மேற்குறிப்பிட்ட சேவை முழுவதும் இலவசமாக வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டம் மூலம் 40 மின்னணு சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம்.