Asianet News TamilAsianet News Tamil

தாம்பத்யத்தில் அதிக ஆசையா? அதுக்கு இதெல்லாம் "ரொம்ப முக்கியம்"..!

ஆண்மையின் அடையாளமான விந்து அணுக்களும் ஆரோக்கியமாக இருக்க எடுத்துக்கொள்ளும் உணவு பொருட்களும் சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தால் தானே சரி. அந்த வகையில் எந்தெந்த உணவு வகை மிக முக்கியம் என்பதை பார்க்கலாம் வாங்க

Is there too much desire in marriage? It's all "very important"
Author
Chennai, First Published Apr 8, 2020, 7:08 PM IST

திருமண வாழ்க்கையில் தாம்பத்யம் சிறந்து விளங்கினால் மட்டுமே...வாழ்க்கையும் சிறப்பாக அமையும். அந்த  வகையில் ஆண்களுக்கு சில முக்கியப்பங்கு உள்ளது. ஆண்கள் அவர்களது துணையை புரிந்துக்கொண்டு எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் முயற்சிக்கு ஆரோக்கியம் முக்கியம். ஆண்மையின் அடையாளமான விந்து அணுக்களும் ஆரோக்கியமாக இருக்க எடுத்துக்கொள்ளும் உணவு பொருட்களும் சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தால் தானே சரி. அந்த வகையில் எந்தெந்த உணவு வகை மிக முக்கியம் என்பதை பார்க்கலாம் வாங்க...

Is there too much desire in marriage? It's all "very important"



விட்டமின் டி

விட்டமின் டி விந்து அணுக்களின் நீந்து சக்தியை அதிகரிக்க உதவி, கருவுறுதலுக்கு வழி வகுக்கிறது. முட்டையின் வெள்ளைக்கரு, எண்ணெய்த்தன்மை நிறைந்த மீன் வகைகள், ரெட் இறைச்சி வகைகளிலும் சூரிய ஒளியிலும் விட்டமின் டி உண்டு

ஜிங்க் உணவுகள்!

விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகளை ஆண்கள் உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் விந்து அணுக்கள் நன்கு இயங்கவும், பெண்ணின் உடலில் நீந்தி செல்லவும் தேவையான சத்துக்களை அளிக்கின்றன. அதிக விந்து அணுக்கள் வெளிப்படவும் உதவுகின்றன. மீன், இறைச்சி, பால் பொருட்களில் ஜிங்க் சத்துகள் உள்ளன.

போலிக் அமிலம்

போலிக் அமில உணவுகள் விந்துகளின் ஆரோக்கியத்தை தரத்தையும் அதிகரிக்கின்றன. போலிக் அமிலம் இலைகளுடன் கூடிய காய்கறிகள், ஆரஞ்சு பழம் போன்றவற்றில் உள்ளது.

செலினியம் சத்துக்கள்!

செலினியம் சத்துக்கள் விந்து அணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீந்து சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. முட்டை, மீன், இறைச்சி, பிரேசிலியன் நட்ஸ் போன்றவற்றில் செலினியம் உள்ளது.
 
விட்டமின் சி

விட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் விந்து அணுக்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், நிவர்த்தி செய்ய உதவுகின்றன. விட்டமின் சி சத்துக்கள் சிட்ரஸ் வகை பழங்களில்  உள்ளன.

நம்பிக்கை கொள்ளுங்கள்!

விந்து அணுக்கள் விஷயத்தில், ஆண்மை குறித்த ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் பயம் கொள்ளவோ, எதுவும் செய்ய முடியாது என நம்பிக்கை இழக்கவோ வேண்டாம். இயற்கை முறையில் தினசரி உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மூலம் ஆண்மையை" அதிகரித்துவிடலாம் என்பதனை எப்போதும் மனதில்  வைத்துக்கொள்ளுங்கள்

 

Follow Us:
Download App:
  • android
  • ios