Asianet News TamilAsianet News Tamil

ஒரு சமோசாவை கூட நிம்மதியா சாப்பிட முடியாது போல இருக்கே! இளவரசர் ஹாரி-ன் வைரல் வீடியோ

அரச குடும்பத்தில் பிறந்துவிட்டால் ராஜ வாழ்க்கை வாழலாம் என்பது பொதுவான கருத்து. ஆனால் அந்த ராஜ வாழ்க்கைக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும் இருக்க தான் செய்கின்றன.

அரச குடும்பத்தில் பிறந்துவிட்டால் ராஜ வாழ்க்கை வாழலாம் என்பது பொதுவான கருத்து. ஆனால் அந்த ராஜ வாழ்க்கைக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும் இருக்க தான் செய்கின்றன. அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு தனக்கென ஒரு பாதை வகுத்து போய்க்கொண்டிருப்பவர் இளவரசர் ஹாரி. இதனாலேயோ என்னவோ மக்களின் மனம் கவர்ந்த இளவரசராக இவர் கருதப்படுகிறார்.


சமீபத்திய பார்ட்டி ஒன்றின் போது எடுக்கப்பட்ட இவரது வீடியோ தான் சமூக வலைதளங்களில் இப்போது வைரல் ஆகி இருக்கிறது. ஹாரியின் மனைவி மேகன் மார்க்கல் சமீபத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அறக்கட்டளை ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட இந்த விருந்தில் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த அறுசுவை விருந்தின் போது இந்திய உணவான சமோசாவும் பரிமாறப்பட்டிருக்கிறது. 

விருந்து முடிந்து வீட்டிற்கு செல்லும் போது ஹாரி சின்ன குழந்தைகள் செய்வதை போல , சமோசாவை மறைத்து வைத்து எடுத்து செல்கிறார். அவரின் குழந்தைத்தனமான இந்த விளையாட்டை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இளவரசராக இருந்தால் ஒரு சமோசாவை கூட நிம்மதியா சாப்பிட முடியாது போல இருக்கே! என ஹாரியின் இந்த க்யூட்டான வீடியோவை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Video Top Stories