உடலுறவின்போது அதிக வலி ஏற்படுகிறதா? அதை தடுக்க வழி இருக்கா? நிபுணர்கள் தரும் டிப்ஸ் இதோ!
உடலுறவின் போது வலி ஏற்படுவது மிகவும் சாதாரணமானது தான். ஆனால் இது பாலியல் இன்பத்தை உண்டாக்க வழிவகுக்காது. மேலும் வலி ஏற்பட்டால் நீண்ட நேரம் உடலுறவிலும் ஈடுபட முடியாது. சரி இதை எப்படி குறைப்பது? வழி உண்டா?
பல பெண்கள் உடலுறவின் போது வலியை அனுபவிக்கிறார்கள், இது பொதுவானது. வலிமிகுந்த உடலுறவு டிஸ்பேரூனியா என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, ஆண் பாலுறுப்பை பெண்ணின் பிறப்புறுப்பில் செலுத்தும்போதும் வலி ஏற்படும். பெரும்பாலான பெண்கள் அடிவயிற்றில் கடுமையான வலியை அனுபவிக்கிறார்கள்.
பெண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்பட என்ன காரணம்?
வலிமிகுந்த உடலுறவுக்கு ஒரு பொதுவான காரணம் உயவு (Lubrication) குறைதல் அல்லது உயவு இல்லாமை. அதேபோல மிகவும் பொதுவான மற்றொரு பிரச்சனை Yonismus, அதாவது உடலுறவின் போது வலி ஏற்படுமோ என்கிற பயம். உடலுறவு வலி, இரத்தப்போக்கு அல்லது சிராய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று சில பெண்கள் பயப்படுகிறார்கள் என்றும் அவர்கள் பாலியல் செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்க முயற்சிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலுறவால் மூளையிலும், உடலிலும் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா? தம்பதிகளே கண்டிப்பா படிங்க..
சரி வலி ஏற்படாமல் தடுப்பது எப்படி?
லூப்ரிகேஷன் : பலர் ஃபோர்ப்ளேவை தவிர்க்கிறார்கள், ஆனால் அது உடலுறவை வலியற்றதாக்குகிறது. இது பெண்களுக்கு லுபிரிகேஷனை அதிகரிக்க உதவுகிறது. பாலியல் உற்சாகம் எவ்வாறு சுரப்பிகளை தூண்டுகிறதோ, அதே போல foreplay லூப்ரிகண்டுகளை சுரக்க தூண்டுகிறது. சிலர் லூப்ரிகண்டிற்கு தேங்காய் எண்ணெய் போன்ற மாற்றுகளையும் பயன்படுத்துகின்றனர். இவை உங்களுக்கு வலியை குறைக்க உதவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உங்கள் துணையோடு பேசுங்கள்
ஆண்கள், பெண்களிடம் வலி ஏற்படுகிறதா என்று கேட்டு செயல்படவேண்டும். அதேபோல பெண்களுக்கு வலியை பொறுத்துக்கொள்ளாமல் தங்கள் துணையிடம் கூற வேண்டும். தம்பதிகள் அதிகம் பேசிக்கொண்டாலே பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
இவை எச்சரிக்கை மணிகள்: உங்கள் கணவருக்கு உங்கள் மீது ஈர்ப்பு இல்லை என்பதற்கான அறிகுறி இதுதான்!