Asianet News TamilAsianet News Tamil

இயற்கையாகவே கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.. எப்படி தெரியுமா?

இயற்கையாகவே அதிக கொழுப்பைக் குறைக்க 7 ஆரோக்கியமான பானங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

How to lower bad cholesterol naturally?
Author
First Published Jul 24, 2023, 12:09 PM IST

ஹார்மோன்கள் மற்றும் செல்களை உருவாக்க, உடலுக்கு கொலஸ்ட்ரால் எனப்படும் மெழுகு மூலக்கூறு தேவைப்படுகிறது. உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) மற்றும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) ஆகியவை கொலஸ்டிராலின் இரண்டு முக்கிய வகைகளாகும். துரதிர்ஷ்டவசமாக, அதிகப்படியான கொலஸ்ட்ரால் அதிக இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க, இயற்கையாகவே குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட உணவுகள் மற்றும் திரவங்கள் மற்றும் உடற்பயிற்சி மற்றும் சமச்சீர் உணவு மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.

எனவே நல்ல கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிக்கவும், உங்கள் உணவுகள் ஆரோக்கியமானதாகவும், கொழுப்பைக் குறைக்கும் வகையிலும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வகையில் இயற்கையாகவே அதிக கொழுப்பைக் குறைக்க 7 ஆரோக்கியமான பானங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

செரிமான பிரச்சனையா? அப்ப கண்டிப்பா இந்த 5 பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்..

க்ரீன் டீ :

இதில் கேடசின்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை ஆபத்தான கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். ஆனால் தனியாக கிரீன் டீ குடிப்பதற்கு பதில், நீங்கள் ஒரு செரிமான பிஸ்கட் அல்லது குக்கீஸ் வகை பிஸ்க்ட்களை பயன்படுத்தலாம்.

பெர்ரி ஸ்மூத்திஸ்:

பல பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இவை இரண்டும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், ப்ளாக்பெர்ரிகள் அல்லது ராஸ்பெர்ரி போன்றவற்றை ஸ்மூத்திகளை உருவாக்கி அருந்தலாம்.

கோகோ பானம்:

டார்க் சாக்லேட்டின் முக்கிய மூலப்பொருள் கோகோவில்  ஃபிளவனால்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, கோகோ ஃபிளவனால்கள் கொண்ட ஒரு பானத்தை குடிப்பதால் தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கலாம். மேலும் இது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

தக்காளி சாறு:

தக்காளியில் ஏராளமாக உள்ள லைகோபீன் ஆபத்தான கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, கொலஸ்ட்ராலைக் குறைக்கும் நியாசின் மற்றும் நார்ச்சத்தும் தக்காளிச் சாற்றில் அதிகம் உள்ளது.

சோயா பால்:

சோயா பால் ஒரு குறைந்த கொழுப்பு, நிறைவுற்ற கலோரி கொண்ட பானமாகும். கொழுப்பின் அளவைக் குறைக்க அல்லது நிர்வகிக்க கிரீம் அல்லது பிற அதிக கொழுப்புள்ள பால் பொருட்களுக்கு பதிலாக சோயா பால் அல்லது க்ரீமகளை பயன்படுத்தவும்.

ஓட்ஸ் பால்:

ஓட்ஸ் குடிப்பது கொழுப்பின் அளவைக் குறைக்கலாம், ஏனெனில் அவை பீட்டா-குளுக்கன்களைக் கொண்டிருக்கின்றன, அவை வயிற்றில் உள்ள பித்த உப்புகளுடன் தொடர்புகொண்டு கொழுப்பின் செரிமானத்தைத் தடுக்கும் ஜெல் போன்ற பொருளை உருவாக்குகின்றன.

இவை தவிர ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதும், வழக்கமான உடற்பயிற்சியைப் பெறுவதும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும். மேலும் சில பானங்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.

உடல் எடையை குறைப்பது முதல் இதய ஆரோக்கியம் வரை.. வாழைக்காய்களில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Follow Us:
Download App:
  • android
  • ios