Asianet News TamilAsianet News Tamil

ஆண்மை அதிகரித்து விந்தணு செம்ம ஸ்ட்ராங்கா இருக்க உண்ண வேண்டியது இதுதான்..!

விட்டமின் டி விந்து அணுக்களின் நீந்து சக்தியை அதிகரிக்க உதவி, கருவுறுதலுக்கு வழி வகுக்கிறது. முட்டையின் வெள்ளைக்கரு, எண்ணெய்த்தன்மை நிறைந்த மீன் வகைகள், ரெட் இறைச்சி வகைகளிலும் சூரிய ஒளியிலும் விட்டமின் டி உண்டு

how to control impotence problem and  have healthy life
Author
Chennai, First Published Jan 14, 2020, 6:27 PM IST

ஆண்மை அதிகரித்து விந்தணு செம்ம ஸ்ட்ராங்கா இருக்க உன்ன வேண்டியது இதுதான்..! 

ஆண்மை அதிகரிக்கவும், தரமான விந்தணுக்கள் உற்பத்திக்கும் மிகவும் தேவையான ஒன்று  ஆரோக்கியமான ஒன்று. அதற்கு செய்ய வேண்டியது என்ன.? நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். 

விட்டமின் டி

விட்டமின் டி விந்து அணுக்களின் நீந்து சக்தியை அதிகரிக்க உதவி, கருவுறுதலுக்கு வழி வகுக்கிறது. முட்டையின் வெள்ளைக்கரு, எண்ணெய்த்தன்மை நிறைந்த மீன் வகைகள், ரெட் இறைச்சி வகைகளிலும் சூரிய ஒளியிலும் விட்டமின் டி உண்டு

how to control impotence problem and  have healthy life

ஜிங்க் உணவுகள்!

விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகளை ஆண்கள் உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் விந்து அணுக்கள் நன்கு இயங்கவும், பெண்ணின் உடலில் நீந்தி செல்லவும் தேவையான சத்துக்களை அளிக்கின்றன. அதிக விந்து அணுக்கள் வெளிப்படவும் உதவுகின்றன. மீன், இறைச்சி, பால் பொருட்களில் ஜிங்க் சத்துகள் உள்ளன.

how to control impotence problem and  have healthy life

போலிக் அமிலம்..!

போலிக் அமில உணவுகள் விந்துகளின் ஆரோக்கியத்தை தரத்தையும் அதிகரிக்கின்றன. போலிக் அமிலம் இலைகளுடன் கூடிய காய்கறிகள், ஆரஞ்சு பழம் போன்றவற்றில் உள்ளது.

செலினியம் சத்துக்கள்!

செலினியம் சத்துக்கள் விந்து அணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீந்து சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. முட்டை, மீன், இறைச்சி, பிரேசிலியன் நட்ஸ் போன்றவற்றில் செலினியம் உள்ளது.
 
விட்டமின் சி..!

விட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் விந்து அணுக்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், நிவர்த்தி செய்ய உதவுகின்றன. விட்டமின் சி சத்துக்கள் சிட்ரஸ் வகை பழங்களில்  உள்ளன.

how to control impotence problem and  have healthy life

நம்பிக்கை கொள்ளுங்கள்!

விந்து அணுக்கள் விஷயத்தில், ஆண்மை குறித்த ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் பயம் கொள்ளவோ, எதுவும் செய்ய முடியாது என நம்பிக்கை இழக்கவோ வேண்டாம். இயற்கை முறையில் தினசரி உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மூலம் ஆண்மையை அதிகரித்துவிடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios