ஆபாச படங்களை பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான தன் மகனுக்கு தந்தை  கொடுத்த தண்டனை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி  உள்ளது.

தெலுங்கானா  மாநிலத்தில், பகடி ஷரிப் என்ற பகுதியில் வசித்து வரும் குய்யம் என்ற  நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

குய்யம் குரேஷிக்கு 19  வயதான மகன் உள்ளார்.இவர் கேபள் ஆபரேடர் நண்பர்களுடன்  சேர்ந்து ஆபாச படங்களை பார்க்கும் பழக்கத்திற்கு அடிமை ஆகி உள்ளார்.

இதனை அறிந்த குரேஷி,மகனை பலமுறை எச்சரித்து உள்ளார்.ஆனாலும்,தந்தையின் கண்டிப்புக்கு கொஞ்சம் கூட செவி சாய்க்காத மகன், தொடர்ந்து ஆபாச படங்களை  பார்த்து வந்துள்ளார்..

வீட்டில் உள்ளவர்களுக்கு சங்கசத்தை ஏற்படுத்துகிறது என்பது  கூட தெரியாமல்,அந்த அளவிற்கு ஆபாச படத்தை மொபைலில் பார்த்து வந்துள்ளார்

ஒரு கட்டத்தில்,மிகுத்த கோபத்திற்கு ஆளான,தந்தை குரேஷி மகனின் வலது கை   மணிக்கட்டுக்கு மேலே கசாப்பு கத்தி கொண்டு ஒரே வெட்டு வெட்டியுள்ளார் .

கை துண்டானதால்,அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு  வருகிறது. இருந்த போதிலும், மீண்டும் அவரால் கையை  பெற முடியாத  நிலை ஏற்பட்டு உள்ளது

இதனை தொடர்ந்து தந்தை குறேஷியை போலீசார் கைது செய்துள்ளனர்.