ரோமியோ - ஜூலியட், அம்பிகாபதி - அமராவதி போல உலக மகா காதலர்களாக இருந்தாலும் காதலனிடம் மறைக்கவும் சில உண்டு என்கின்றனர் பெண்கள். ஆண்களைப் பொறுத்தவரைக்கும் பெண்ணைப் பெற்றவர்கள் ரெண்டே வகை - வில்லன் அல்லது காமெடி பீஸ். காதலன் தன் பெற்றோரைக் கிண்டல் செய்யாமல் இருக்க அவர்களது பலவீனங்களை அவனிடம் இருந்து மறைப்பது நல்லது என்கின்றனர் பெண்கள்

செக்ஸ் மற்றும் சுய இன்பம் குறித்து பேசவே கூடாது என்கின்றனர் பெண்கள் ஒரு சாதாரணமான விஷயம்தான் என்றாலும் ஆண்களே பேசாதபோது பெண்கள் எப்படி பேசமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். தனிப்பட்ட பிரச்சனை, வீட்டுப் பிரச்சனை, ஒருவருக்கொருவர் பிடிக்காத விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து பேசினாலும் நிதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவது குற்ற உணர்வைத் தூண்டும் என்கின்றனர். 

ஆண்கள் காதலிக்குத் தெரியாமல் சமூக வலைதளங்களில் ரகசிய சாட்டிங் செய்வது போல தாங்களும் டைம் பாசிங்கிற்கு சாட்டிங் செய்வதாகக் கூறுகின்றனர் பெண்கள். ஆண்கள் கிழிந்த ஜீன்சையும் ஒரு ஆண்டுக்கு மேல் போட்டுக் கடத்துவதாகக் கூறும் பெண்கள் தாங்கள் ஒரு முறை போட்ட ஆடையை மீண்டும் போட ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆகும் என்கின்றனர். எனவே ஆடைகள் வாங்க ஷாப்பிங் போனால் ஆண்கள் கிண்டல் செய்வதாகக் கூறுகின்றனர். அதனால் ஷாப்பிங் செல்வதை ஆண்களிடம் சொல்ல மாட்டார்களாம். 

காதல் திருமணமா இருந்தாலும் கூட தாம்பத்ய உறவில் ஆணுக்குத் தேவையானதைத்தான் பெண் செய்ய வேண்டும் என ஒரு எழுதாத விதி இருப்பதாகக் கூறும் பெண்கள், தங்களுக்கும் ஆசைகள் இருந்தாலும், ஆண்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாததால் தாங்கள் வெளியே பேசுவதில்லை என்கின்றனர். காதலனின் அம்மா நடந்துகொள்ளும் முறை பிடிக்காவிட்டால் அது குறித்து கூற முடியாது. கல்யாணத்துக்கு முன்பே இப்படி பேசினால்,  திருமணத்துக்கு பிறகு என்ன நடக்குமோ என்ற பேச்சு வரும். போன்ல சீக்ரெட் கோட் பேட்டர்ன் வைக்கிறதுல ஆண்கள் பெண்களை வெல்ல முடியாது. காதலனின் சீக்ரட் பேட்டர்னை கண்டுபிடித்தாலும் வெளியில் சொல்வதில்லை என்கின்றனர் பெண்கள். தெரிந்துவைத்துக்கொண்டு தேவையானபோது பயன்படுத்திக்கொள்வார்களாம். 

அந்த மூன்று நாட்கள் : அது குறித்து ஆண்களிடம் பேச முடியாது. அந்தப் பிரச்சினைகளை புரியவைக்க முடியாது என்று சொல்லும் பெண்கள் அத்னை பேசாமலே இருந்துவிடலாம் என்கின்றனர். மெட்ரோ சிட்டியின் பார்ட்டி கலாச்சரத்தில் புகைபிடித்தல் மது அருந்துதல் பழக்கம் லேசாக வந்தாலும் அதனை காதலனிடம் சொல்ல விரும்புவதில்லை என்கின்றனர். தாங்கள் மீண்டும் மீண்டும் செய்யும் போது தவறாகத் தெரியாத பழக்கம் பெண் ஒரே ஒரு முறை செய்துவிட்டாலும் வாழ்க்கை முழுவதும் பெரும் தவறாக பூதாகரப்படுத்தப்படும் என்கின்றனர்.