தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திடீரென பெய்த கன மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக இன்று மதியம் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த சூறை காற்றுடன் காஞ்சிபுரத்தில் மழை பெய்ததால் சாலை எங்கும் வெள்ளம் நிரம்பியது. பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. சில இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்துள்ளன.

மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தை தொடர்ந்து, திருவள்ளூர், வேலூர், திண்டுக்கல், ஊட்டி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி உள்ளது.

அதே போன்று தெலுங்கானா மாநிலத்தில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இவ்வாறாக பல்வேறு இடங்களில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நடுவே திடீரென பெய்த கன மழையால், மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று நிவாரணம் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.