காமம்… மனித வாழ்வில் மிக முக்கியமான விஷயம். காமம் என்பது இல்லாவிட்டால், ஆதாம்-ஏவாளோடு உலகம் முடிந்திருக்கும். இனப்பெருக்கத்திற்காக மட்டும் இல்லாமல், இல்லறம் சுவைக்கவும் காமம் மிகவும் முக்கியமானது. காமம் சற்று தடம் மாறினாலும், இல்லற வாழ்க்கை பெரும் விபத்தை சந்திக்க வேண்டிருக்கும். அதேநேரத்தில், மனைவி மீதோ, கணவன் மீதோ காமம் உண்டாகும்போது, அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், பூதாகரமான பல பிரச்சனைகள் குடும்பத்தில் வெடிக்கும். குடும்பம் சிதிலமடையும். ஆகவே, காமத்தை வாழ்வின் முக்கியமான அம்சமாக புரிந்து கொண்டு, அந்த உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்கான உணவுகளையும் நாம் உண்ண வேண்டும்.

காமத்தை தூண்டும் உணவுகள்

போர்ட் ஒயின் : இதை குடிப்பதால், மனது ரிலாக்ஸ் ஆகி, காம உணர்வு தூண்டப்படுகிறது. ஒயின் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் காம உணர்வை தூண்டக்கூடியது. எனவே, உறவுக்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன் ஒயின் குடித்தால், கட்டில் விளையாட்டில் களைகட்டலாம் என்று கூறும் மருத்துவர்கள், தொடர்ந்து ஒயின் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

வாழைப்பழம் : வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்த வாழைப்பழங்கள் உடலுக்கு குளிர்ச்சியை கொடுப்பதால், காம உணர்வு தூண்டப்படுகிறது. அதிக சர்க்கரை சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், மிகுந்த சக்தியை கொடுப்பதோடு, நீண்ட நேர இல்லறத்துக்கும் உதவுகிறது.

கடல் சிப்பிகள் : முத்துச் சிப்பிகளைப் போல காணப்படும் கடல் சிப்பிகளின் சதைப்பகுதி, மிகச்சிறந்த காமப்பெருக்கியாக செயல்படுகிறது. ஜிங்க் சத்தை அதிகம் கொண்ட கடல் சிப்பியை உணவாக எடுத்துக் கொண்டால், ஆண்மை பெருகி, காமம் ஊற்றெடுக்கும் என கூறப்படுகிறது.

பூண்டு : ஆணுறுப்பை விரைப்படையச் செய்யும் நைட்ரிக் ஆக்சைடு சிந்தேஸ் எனப்படும் அமிலம் சுரக்க பூண்டு பெரிதும் உதவுவதால், அதை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்களின் இடுப்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்க, பூண்டு மிகச்சிறந்த உணவு என்பதால், ஆணுறுப்பின் விரைப்பும் சிறப்பாக இருக்கும்.

அவகேடோ பழம் : பீட்டா கரோட்டின், மெக்னீசியம், விட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த இந்த பழத்தை, சாப்பிடுவதால், காம உணர்வு தூண்டப்படும். இது ஆண், பெண் இருவருக்கும் காம உணர்வை அதிகரிக்கும் என்பதால், யாருக்கு தேவையோ அவர்கள் இதை சாப்பிடலாம்.

அத்திப்பழம் : பண்டைய காலம் முதலே ஆண்மை பெருக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் அத்திப்பழத்தில் விட்டமின்கள் ஏ, பி1, பி2 மற்றும் சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து உள்பட பல்வேறு சத்துகள் உள்ளன. இந்த சத்துகள் அனைத்துமே ஆண்மை குறைபாட்டைத் தீர்க்கும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்பராகஸ் : தமிழில் தண்ணீர்விட்டான் கிழங்கு எனப்படும் இதை சாப்பிட்டால், ஆண், பெண் இருவருமே உடலுறவில் உச்சத்தை அடையலாம். பிறப்புறுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால், உறவும் நீண்டநேரம் நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சாக்லெட் : இது எப்போதும் காதலுடன் தொடர்புடையது என்பதால், காமத்துடனும் தொடர்புடையது. காமம் இல்லாமல், காதல் இல்லை. எனவே உணர்ச்சியைத் தூண்டும் சாக்லெட், உறவில் உச்சத்தை அடையவும் உதவுகிறது.

துளசி : காம உணர்வையும், இனவிருத்தித் திறனையும் அதிகரிக்கும் துளசியானது, ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதனால், துளசியை நாள்தோறும் எடுத்துக் கொள்வது, இல்லற வாழ்க்கைக்கு ஆகச்சிறந்தது.

மிளகாய் : காரத்தன்மையால் உடலை சூடேற்றும் மிளகாய், மிகச்சிறந்த காமப்பெருக்கியாகும். குடை மிளகாய் உள்பட அனைத்து ரக மிளகாய்களுமே இதயத்துடிப்பையும், ரத்த ஓட்டத்தையும் சீராகக் கூடியது என்பதால், காமத்தைப் பெருக்கி, உடலில் உணர்ச்சியை தூண்டக்கூடியது.