அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இன்று "பிறந்த நாள்"..! குவியும் பொதுமக்களின் பாராட்டும் வாழ்த்துக்களும்..! 

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் பொதுமக்கள் சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

கொரோனா தாக்கம் இந்தியாவை தாக்க தொடங்கிய முதல் நாள் முதலே மிகவும் கவனமாக செயல்பட தொடங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர். அந்த வகையில் மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கினாலும் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்காத வகையில் மிக சிறப்பாக பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு, விமான நிலையம், மற்றும் மற்ற மாநிலங்கள் உடனான எல்லைப்பகுதி என பல இடங்களில் சோதனை செய்து மக்களுக்கு நம்பிக்கையாக தொடர்ந்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். 

இன்னும் சொல்லப்போனால் கொரோனோ வைரஸ் பெயரைகேட்டாலே நாம் நடுங்குகிறோம். யார் தும்மினாலும் இருமினாலும் நமக்கு வந்துவிடுமோ என்ற பயம் நம்மை பற்றிக்கொண்டு உள்ளது அல்லவா? என்னதான்அவர் ஒரு அமைச்சராக இருந்தாலும் அவருக்கும் உயிர் மீது பயம் இருக்காதா ? என்ற கேள்விக்கு விடை... அயராது உழைக்கும் அவரது பணிகளில் தெரிந்துகொள்ளலாம். 

கொரோனோ வைரஸ் பரவ வாய்ப்புள்ள விமானநிலையங்கள், பேரூந்து ரயில்நிலையங்கள், கொரோனோ உள்ளதா என பரிசோதனை நடைபெறும் மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம் என அனைத்து இடங்களுக்கும் சென்று நேரில் ஆய்வு செய்து வந்த அமைச்சருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வந்தது 

மேலும் கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.  இதற்கெல்லாம் விதிவிலக்காக அமைந்து விட்டது..டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டு திரும்பிய பெரும்பாலானோருக்கு கொரோனா உள்ளது என்கிற விஷயம்.

இந்த ஒரு நிலையில் அரசியல் பின்புலம் காரணமாக, மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கவில்லை என்றாலும், இன்று அவருக்கு பிறந்த நாள் என்பதால், மக்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .