சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 34,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில், 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. அதேபோல் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.35,040-க்கு விற்பனையானது. 

இந்நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.34,720-க்கு விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,340ஆக குறைந்துள்ளது. அதாவது, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45  குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 1.70 குறைந்து ரூ.72.30 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 72,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.