திருமணத்துக்கு முன்பு வரை, எப்ப திருமணம் என பார்க்கும்போதெல்லாம் கேட்டு நச்சரிக்கும் உறவினர்கள், திருமணத்திற்கு பிறகு, வீட்ல விசேசமில்லையா? என கேள்வியை மாற்றி விடுவார்கள். திருமணத்துக்கு முன்பு அவர்கள் கேட்கும்போது எப்படி எரிச்சல் வருகிறதோ, அதேபோல், திருமணம் முடிந்து பல மாதங்கள் ஆகி, குழந்தை வயிற்றில் தங்காவிட்டாலும், அந்த எரிச்சல் மீண்டும் நம்மை தொற்றிக் கொண்டு, பாடாய்படுத்த தொடங்கிவிடும்.

 

நமக்காக இல்லாவிட்டாலும், நம்மை கேள்வி மேல் கேள்விகேட்டு தொனதொனக்கும் உறவினர்களுக்காகவும், பேரக்குழந்தையை பெற்றுக்கொடு என அன்பாய் நச்சரிக்கும் பெற்றோருக்காகவும், திருமணம் முடித்ததும், முடிந்தவரை விரைவில் குழந்தை பெற்றுக் கொள்வது அவசியமாகிறது. அப்படி ஒரு சூழலில், துணையுடன் உறவு கொள்வதற்கு சரியான நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். மாதவிடாய் காலத்திற்கு பிறகு, மருத்துவரின் சரியான ஆலோசனைப் பெற்று, எத்தனை நாட்களில் உறவு என தெரிந்துகொண்டு செய்தால், வயிறு மேல் பலன் கிடைக்கும். அதேநேரத்தில் மனம் அழுத்தமாக இருக்கும்போது, கடுமையான வேலைப்பளுவை முடித்துவிட்டு வந்த பிறகும் செக்ஸ் வைத்துக் கொள்வதில் எந்த பிரயோசனமும் இல்லை.

 

வேலைப்பளு கடுமையாக இருக்கிறது. ஒரே டென்சன் என நீங்கள் புலம்பினால், கவலையே வேண்டாம். அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு, இணையுடன் வீட்டில் இருங்கள், அடிக்கடி உறவு கொள்ளுங்கள். உள்ளூரில் இருந்தால், ஏதாவது ஒரு தொல்லை வரும் என நினைத்தால், உறவினர்கள் இல்லாத ஏதாவது ஒரு சுற்றுலாத் தளத்துக்கு சென்று, இயற்கையையும், வாழ்க்கையையும் அனுபவியுங்கள். பொதுவாக குளிர்ச்சியான பிரதேசங்களுக்கு சென்று, அங்கு அடிக்கடி உறவு வைத்துக் கொண்டால், விந்தணு மற்றும் சினை முட்டையின் வீரியம் சிறப்பாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே அதை கவனித்தில் கொள்ளுங்கள்.

செக்ஸ் முறைகளில் கவனம் செலுத்துங்கள். ஒரு மாதிரியான சூழல் மற்றும் ஒரே மாதிரியான முறைகளை தவிர்த்துவிட்டு, வீட்டிலேயே வெவ்வேறு இடங்களில் உறவு கொள்ளுங்கள். வெவ்வேறு முறைகளில் உறவு கொள்ளுங்கள். அது இன்னும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபாட்டை அதிகரிக்கும். மேலும், அதுபோன்ற ஒரு நிகழ்வால், மனதளவில் மாற்றம் ஏற்பட்டு, அதுவே கருவுறுதலுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும். ஏனெனில் உடல் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், மனதும் நன்றாக இருந்தால்தான் கருத்தரிக்கும். உடலும், மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்போது கருத்தரித்தலே, ஆரோக்கியமான குழந்தைக்கு அச்சாரமாக இருக்கும் என்பதை உணருங்கள்.

அதிக எடை கொண்டவர்கள், பயிற்சிகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதன் மூலம் எடையை குறையுங்கள். வயிற்றைக் கட்டி, உடலை வருத்தி கர்ப்பம் தரித்தால், குழந்தை பிறக்கும்போது, பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மது, புகை ஆகியவற்றை தவிர்த்துவிடுங்கள். சமச்சீரான உணவு, புரதம், கனிமம், விட்டமின்கள் உடலுக்கு தேவையான அளவை தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கூடிய விரைவில் தொட்டில் ஆடும். அதில் குழந்தையும் தூங்கும்!