Asianet News TamilAsianet News Tamil

Sex drive: இல்லற வாழ்வை சிறப்பாக்கும் சீக்ரெட்...செக்ஸ் உணர்வை தூண்டும் உணவுகள்...!

நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில உணவு பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இயற்கை முறையில்  செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யலாம். 

Foods to increase sex drive
Author
Chennai, First Published Jan 23, 2022, 11:14 AM IST

இன்றைய நவீன காலகட்டத்தில் திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர்.

Foods to increase sex drive

 இதனைத் தவிர்த்து, நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில உணவு பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இயற்கை முறையில்  செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யலாம். வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதிலும் குழந்தையின்மை பிரச்சனையால், 15 சதவீத தம்பதிகள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின்மைக்கு, உடல் ஆரோக்கியம் சார்ந்த இந்த உணவு வகைகள் முக்கியக் காரணமாக அமைகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகள் உங்கள் செக்ஸ் உணர்வை தூண்டி இல்லற வாழ்வை சிறப்பாக்குகின்றன.
 
கீரை வகைகள்:

கீரைகளில் டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கும் மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, வாரம் இரண்டு முறையாவது கீரை உணவுகளைச் சாப்பிட வேண்டும். இது இரத்த ஓட்டத்தை தூண்ட செய்கிறது மற்றும் டெஸ்டோஸ்ட்ரான் அளவை அதிகரிக்க செய்கிறது.

மீன் மற்றும் முட்டை:

மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் டி நிறைவாக உள்ளன. இவற்றை அடிக்கடிச் சாப்பிட்டு வரலாம். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருக்கிறது. இது டெஸ்டோஸ்டீரான் சுரப்பைத் தூண்டக்கூடியது. ஆண்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.

அவகேடோ:

Foods to increase sex drive

அவகேடோவில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது கருவுறாமை உள்ள ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம். நடுத்தர அளவிலான ( 150 கிராம்) அவகேடோ வைட்டமின் ஈ க்கான 21% டிவி அளிக்கிறது.

வாழைப்பழம் மற்றும் பீட்ரூட்: 

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துகள் காம உணர்வுகளை தூண்டும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரிக் ஆசிட் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

கேரட்:

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால் கேரட் அதிகமாக சாப்பிட வேண்டும். பாரம்பரிய மருத்துவத்தில் ஆண் மலட்டுத்தன்மைக்கு நீண்ட காலமாக கேரட் பரிந்துரைக்கப்படுகிறது.

மாதுளை மற்றும் ஆப்பிள்: 

மாதுளையிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும். மாதுளையை ஜூஸாக்கி அருந்துவதைவிட அப்படியே பழமாகச் சாப்பிடுவது நல்லது. அதேபோன்று, ஆப்பிள்கள் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. எனினும் புரோஸ்டேட் ஆரோக்கியம் பற்றி குறைவாகவே அறியப்பட்டுள்ளது.

Foods to increase sex drive

பால் மற்றும் நட்ஸ்:

பாலில் கால்சியம் மட்டுமன்றி வைட்டமின் டி  சத்தும் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலிமையடையும்; ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. அத்துடன் இவற்றிலுள்ள சாச்சுரேட்டடு, மோனோ அன்சாச்சுரேட்டடு கொழுப்புகள் டெஸ்டோஸ்டீரான் உற்பத்திக்கு உதவக்கூடியவை. இதனை தவிர்த்து, உடல் எடையை அதிகரிப்பு, ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல், அதிக மன அழுத்தம் போன்றவை செக்ஸ் வாழ்விற்கு தடையாக அமைகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios