மனித வாழ்வில் மிகவும் இன்றி அமையாத ஒரு அம்சம் செக்ஸ். வயது வந்த ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் செக்சை நோக்கி செல்வது இயல்பான ஒன்று. செக்ஸ் குறித்த புரிதல் உள்ளவர்கள் கூட முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது தடுமாற்றங்களை எதிர்கொள்வது வழக்கமான ஒன்று தான்.

முதல் முயற்சியிலேயே வெற்றி என்பது பலருக்கு சாத்தியமாகாது. செக்சும் கூட அப்படித்தான். செக்சில் என்ன வெற்றி? தோல்வி? என்கிறீர்களா? இங்கு வெற்றி என்பது உச்சகட்ட மகிழ்ச்சியை குறிப்பதாகவும். உச்சகட்ட மகிழ்ச்சி என்று ஒன்று இருப்பதே பலருக்கு பல நாட்களாக தெரியாது.

 இந்த மாதிரியான தர்மசங்கடமான சூழல்களை தவிர்த்து முதல் முறையாக செக்ஸ் வாழ்க்கையை தொடங்கும் ஆண் – பெண் இருபாலருக்குமான டிப்ஸ் இதோ

1.உண்மையை மறைக்க வேண்டாம்

செக்ஸ் என்பது இருவர் சார்ந்தது. இருவரில் ஒருவருக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கலாம். இல்லை இருவருமே அனுபவம் இல்லாதவர்களாக இருக்கலாம். எனவே முதல் முறை செக்சை முடித்த பிறகு இருவரும் மனம் விட்டு பேசலாம். அப்போது உச்சகட்ட இன்பம் குறித்து பகிர்ந்து கொள்ளலாம். உச்சகட்ட இன்பம் கிடைக்காத நிலையில் கிடைத்துவிட்டதாக பொய் கூற வேண்டாம். ஏனென்றால் எதிர்காலத்தில் உங்களுக்கு உச்சகட்டம் என்பது இதன் மூலம் கிடைக்காமலேயே போய்விடும். செக்சின் போது உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை உங்கள் பார்ட்னரிடம் கூறும் போது தான், உங்களை உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்ல அவர் அடுத்தடுத்த முறைகளில் முயற்சி மேற்கொள்வார்.

2.முதல் முறை செக்சின் போது வலிக்குமா?

பெரும்பாலான பெண்கள் முதல் முறை செக்சுக்கு தயாராகும் போது அச்சம் கொள்கின்றனர். இதற்கு காரணம் வலிக்கும் என்று பரவலாக இருக்கும் கருத்து தான். ஆனால் செக்சை முறையாக மேற்கொள்ளும் போது முதல் முறையும் கூட இன்பத்தை வாரி வழங்குவதாகவே இருக்கும். ஆனால் பெண்களுக்கு முதல் முறை சிறிது அன்கம்பர்ட்டபுள்ளாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால் வலிக்கும் என்பது தவறானது.

3.முதல் அனுபவத்தை ஒப்பிட வேண்டாம்

 முதல் முறையாக செக்சின் போது கிடைத்த அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்வதில் தவறில்லை. ஆனால் நண்பர்களாக இருந்தாலும் சரி தோழிகளாக இருந்தாலும் சரி கிடைத்த அனுபவத்தை உண்மையாக கூறுவது நலம். கிடைக்காத இன்பத்தை கிடைத்துவிட்டதாக நண்பர்களிடம் கூறிக் கொள்வதில் எந்த பலனும் இல்லை. அதே போல், உங்கள் நண்பர்கள் தங்களுக்கான செக்ஸ் அனுபவத்தை கூறும் போது அதனை உங்களுடைய அனுபவத்துடன் ஒப்பிட்டுக் கொள்வது தவறானது.

4.முன்விளையாட்டு

செக்சின் துவக்கம் முன்விளையாட்டு. அதாவது செக்ஸ் என்பது இருவரது பிறப்புறப்பும் ஒன்றாக சேர்வதை குறிக்கிறது. நேரடியாக முதல் முறையில் செக்சுக்கு செல்வது என்பது ஒரு மோசமான அனுபவமாகவே இருக்கும். எனவே முன்விளையாட்டு என்பது மிகவும் அவசியம். அதிலும் நீங்கள் ஒன்றை செய்யும் போது உங்கள் பார்ட்னருக்கு அது பிடித்துவிட்டது என்றால், அதனை குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது செய்து கொண்டே இருக்கலாம். முன்விளையாட்டு தீவிரமாகும் போது செக்ஸ் அதாவது உங்கள் உறுப்புகள் சேர்வது இயல்பாக அமைந்துவிடும்.

5.முதல்முறையே உச்சகட்டம்

முதல் முறையாக உடல் உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு அவர்களது ஆண் உறுப்பு உடனடியாக ஒத்துழைத்துவிடாது. இரண்டு முக்கியமான விஷயங்கள் முதல் முறையிலான உடலுறவின் போது ஆண்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது முன்கூட்டியே விந்து வெளியாகிவிடுவது. முதல் முறையாக ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருக்கும் போது பெரும்பாலான ஆண்களால் உச்சகட்டத்தை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு விந்து வெளியாகிவிடும். இன்னும் சிலருக்கோ பயம் மற்றும் தயக்கம் காரணமாக ஆண் உறுப்பு எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாது.

  இந்த இரண்டுமே தவறு இல்லை. செக்சில் இந்த இரண்டுமே வழக்கமான ஒன்று தான். இரண்டையுமே அடுத்தடுத்த முறைகளில் சரி செய்துவிட முடியும். இந்த இரண்டையும் கடந்து முதல் முறையே செக்சில் ஈடுபடும் இருவரும் உச்சகட்ட இன்பத்தை அடைந்துவிட்டால் வாழ்த்துகள்.