Asianet News TamilAsianet News Tamil

“இப்படி போய், அப்படி வந்தால் போதும்”... கொரோனா பயமே இல்ல... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ஆட்சியர்...!

எனவே இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் முதன் முறையாக திருப்பூரில் ஒரு தடாலடி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

First time in India Tirupur Market Entrance Installs Disinfectant tunnel
Author
Chennai, First Published Apr 1, 2020, 5:31 PM IST

உலக நாடுகளையெல்லாம் பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தனது கோர தாண்டவத்தை தொடங்கியுள்ளது. இதனால் இங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 637 ஆக உள்ளது. இந்த கொடிய கிருமியால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். 

First time in India Tirupur Market Entrance Installs Disinfectant tunnel

கொரோனா வைரஸை விரட்ட மத்திய, மாநில அரசுகள் புயல் வேகத்தில் களத்தில் இறங்கியுள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மதியம் 2.30 மணி வரை வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

First time in India Tirupur Market Entrance Installs Disinfectant tunnel

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!

அந்த குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வரும் மக்களும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காமலும், மாஸ்க் அணியாமலும் கூட்டம், கூட்டமாக திரண்டு பீதி கிளப்புகின்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க: கழுத்துக்கு கீழே அசத்தல் டாட்டூ... ரசிகர்கள் பார்வைக்காக ரகசிய இடத்தை திறந்து காட்டிய டாப்சி...!

எனவே இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் முதன் முறையாக திருப்பூரில் ஒரு தடாலடி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் சந்தையில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள் மக்கள் 3 முதல் 5 நொடிகள் சென்றுவிட்டு, கைகளை நன்றாக கழுவிய பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுவதாக திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்தியேன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவையும் பதிவிட்டு மக்களுக்கு சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios