ஆலைய வழிபாட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இதோ..! 

நாம் ஆலயம் செல்லும் முன் மிக முக்கிய சில விஷயங்களை கடைபிடிப்பது மிகவும் நல்லது 

ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் தீபத்தை ஏற்ற வேண்டும். 

சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும் பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது. ஒரு கையில் விபூதியை வாங்க கூடாது. குங்குமத்தையும் அதே போன்று ஒரு கையில் வாங்கக் கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோன்று விபூதியை குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும். விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும்.

பூஜையின் போது சுவாமிக்கு மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது. கோவிலுக்குள் சென்று விட்டால் இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.

கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும். சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.

மேலும் இது போன்ற பல விஷயங்கள் உள்ளது. நம் முன்னோர்கள் எது சொன்னாலும் அதில் பல காரணங்கள் உள்ளது. அறிவியல் பூர்வமான விஷயங்களும் உள்ளது.