Asianet News TamilAsianet News Tamil

மனதை உலுக்கும் ஃபானி புயல் கோர காட்சி..! 175 km வேகத்துல வீசும் காற்றை பாருங்க ..!

வங்க கடலில் உருவான ஃபானி புயலானது அதி தீவிர புயலாக மாறி ஒடிசா கடற்கரையில் கரையை கடக்கிறது. 

fani cyclone shocking video
Author
Chennai, First Published May 3, 2019, 3:04 PM IST

வங்க கடலில் உருவான ஃபானி புயலானது அதி தீவிர புயலாக மாறி ஒடிசா கடற்கரையில் கரையை கடக்கிறது. அதன்படி இன்று காலை சுமார் 8.30 மணி அளவில் புயல் கரையை கடக்க தொடங்கியது. நேற்று பானி புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டதால், நேற்று மாலையே இரவோடு இரவாக சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி175 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மரங்கள் வேரோடு பிடிங்கி சாயும் அளவிற்கு வீசி உள்ளது. இதற்கு முன்னதாக, தமிழகத்தை தாக்கிய கஜா புயலின் தாக்கத்தை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாக உள்ளது.

கஜாவை மிஞ்சி ஃபானி புயல், அதனுடைய ருத்ர தாண்டவத்தை காட்டி வருகிறது. சொல்லப்போனால்1999 ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபானி புயல் கரையை கடந்த பின்னர் தான் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த முழு விவரம் வெளியே வரும். 

Follow Us:
Download App:
  • android
  • ios