ஃபானி புயல் காரணமாக சென்னையில் இருந்து ஒடிசா, ஆந்திரா செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வார காலமாக ஃ பானி புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் இது கரையை கடக்கும் போது அதி வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் அதி தீவிர புயலாக மாறி நாளை ஒடிசா கடற் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது சுமார் 17 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்றும், சென்னைக்கு தென்கிழக்கில் 420 கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது மையம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆந்திரா,ஒடிசா  போன்ற மாநிலங்களுக்கு சென்னையில் இருந்து புறப்பட கூடிய ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒடிசா மாநிலத்தில் தாழ்வான சில பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 

சென்னை மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திரா ஒடிசா செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் யஷ்வந்த்பூர் to முசாபர்பூர், சந்திரகாசி,சாலிமர் ஹவுரா ஆகிய விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயிலில் பயணம் மேற்கொள்ள இன்று மற்றும் நாளை நாளை தினங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் தற்போது தங்களுடைய டிக்கெட்டை ரத்து செய்து அதற்கான பணத்தை தென்னக ரயில்வேயிடமிருந்து திரும்பப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.