Asianet News TamilAsianet News Tamil

Sperm donation: விந்தணு தானம் செய்வது நல்லதா? கெட்டதா? அறிவது அவசியம்...

இன்றைய நவீன வாழ்கை முறை மாற்றத்தால், உலகளவில் மில்லியன் கணக்கான தம்பதிகள் கருத்தரிக்க முடியாமல்  சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

Facts about sperm donation
Author
Chennai, First Published Jan 29, 2022, 1:07 PM IST

இன்றைய நவீன வாழ்கை முறை மாற்றத்தால், உலகளவில் மில்லியன் கணக்கான தம்பதிகள் கருத்தரிக்க முடியாமல்  சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதனால், அனைவரும் மருத்துவமனை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். முன்பெல்லாம், குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியினர் பத்து வருடங்களுக்கு பிறகு தான், மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தலை நோக்கி சென்றார். ஆனால், தற்போது உள்ள கால மாற்றத்தால் திருமணம் முடிந்த ஒரு வருடம் கடந்த, இளம் தம்பதியினர் கூட செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, மன அழுத்தம், எடை அதிகரிப்பு, பிஸியான வாழ்கை முறை போன்றவை செயற்கை கருத்தரிப்புக்கு  முக்கிய காரணமாக அமைகிறது.

Facts about sperm donation

விந்தணுக்களின் நன்கொடை என்பது ஒரு தன்னார்வ செயல் ஆகும். இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான ஆணுடன், விந்தணுக்களின் உகந்த தரம் கொண்ட, அவசியமான நோயாளிகளுக்கு கருவுற்றிருப்பதை அடைவதற்கான நோக்கத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால்,  இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்து கொண்ட பல கருத்தரிப்பு மையங்கள், சிகிச்சைக்காக லட்சங்களில் பணம் பெரும் நேர்மையாக செயல்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருக்கிறது.  

உண்மையில், விந்தணு தானம் என்பது குழந்தையில்லாத தம்பதிகளின் குழந்தை கனவை நனவாக்கும் திட்டத்தோடு துவங்கப்பட்டது. அத்தகைய தம்பதிகளுக்கு, IVFமட்டுமே பெற்றோராக மாறுவதற்கான ஒரே வழி. இதற்கு அவர்களுக்கு விந்தணு தானம் செய்பவர் தேவை. அதுமட்டுமின்றி, தனித்து வாழும் பெண்ணோ தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என விரும்பினால்,  IVF முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், விந்தணு தானம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும். 

மேற்படி விந்தணு தானம் செய்வோர் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

1. வயது 18 மற்றும் 40 ஆண்டுகளுக்கு இடையே இருக்க வேண்டும்.

2. மருத்துவ பரிசோதையில் உடல்நலம் ஒரு நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

3. விந்தணு தானம் செய்பவருக்கு எந்தவித இணை நோய்களும் இருக்கக்கூடாது

4. தானம் செய்பவருக்கு பரம்பரை நோய் எதுவும் இருக்கக்கூடாது.

5. அவர் தனது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ வரலாற்றை வழங்க ஒப்புக்கொள்ள வேண்டும்.

6. அவர் தனது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது அடையாளச் சான்று எதையும் வழங்க ஒப்புக்கொள்ள வேண்டும்.

Facts about sperm donation

 குறிப்பாக, இங்கிலாந்தில் குழந்தை இல்லாத பெரும்பாலான தம்பதிகள் தங்கள் குழந்தைகளைப் பெறுவதற்காக IVF மையங்கள் அல்லது கருவுறுதல் கிளினிக்குகளுக்குச் செல்கின்றனர். அங்கு, செலவு செய்ய முடியாதவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் விந்தணு தானம் செய்பவர்களை தேடும் பழக்கம் உள்ளது.

விந்தணு தானம் செய்வது நல்லதா? கெட்டதா? எனபதை தாண்டி, முதலில் ஆண்கள், பெண்கள் இருவருமே நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.  திருமணம் செய்வதன் நோக்கமே ஆணும், பெண்ணும் இணைந்து உடல் சுகத்தை அனுபவித்து,  ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக  சந்தோஷமாக  நீண்டகாலம் வாழ வேண்டும் என்பதுதான்.

Facts about sperm donation

குழந்தைப்பேறு என்பது திருமணத்தின் ஒரு பகுதி மட்டும் தான். வெறுமனே குழந்தை பெற்றுக் கொள்ள திருமணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.  நவீன சிகிச்சை முறைகளில்  இணையுடன் உறவில் ஈடுபடாமலே குழந்தை பெற்றுகொள்ள முடியும். எனவே திருமணம் எனும் பந்தத்தை உணர்ந்து முதலில் சந்தோஷமாக இருக்க வேண்டும். குழந்தைக்காக எதிர்பார்த்து மட்டும் இணையுடன் சேரக்கூடாது. முடியாத பட்சத்தில் மருத்துவமனை செல்வது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios