பார்க்கிங் வேலைக்கு இத்தனை இன்ஜினியர் மாணவர்கள் விண்ணப்பமா..? பகீர் தகவல் ..! 

நாட்டில் தற்போது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதை பிரதிபலிக்கும் விதமாக தற்போது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைக்கு கூட இளம் பட்டதாரிகள் விண்ணப்பித்து வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் மட்டும் புரசைவாக்கம், அண்ணாநகர் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளில் 2000 பார்க்கிங் பகுதிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் அல்லது மற்ற வாகன ஓட்டிகளும் எங்கு வெளியில் சென்றாலும் பார்க்கிங் வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனை தவிர்க்கும் பொருட்டு இதற்காகவே ஒரு செயலி உருவாக்கப்பட்டு, எந்த இடத்தில் பார்க்கிங் உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்துக்கொள்ளும் விதமாக இந்த செயலியை பயன்படுத்தி எளிதாக பார்க்கிங் செய்ய முடியும்

இதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த முடியும். முதல்கட்டமாக 222 பகுதிகளில் இந்த முறை செயல்பாட்டிற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனத்திடம் இந்த வேலையை செய்து முடிக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பார்க்கிங் பராமரிப்புக்காக தேவைப்படும் வேலை ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து இதற்காக ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் 70 சதவீதம் பேர் இஞ்சினியரிங் படித்தவர்களும் இளம் பட்டதாரிகளும் தான்..

வேறு எங்கும் வேலை கிடைக்காததால் எந்த வேலை கிடைத்தாலும் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் விண்ணப்பித்து உள்ளனர். பார்க்கிங் பராமரிப்பு வேலைக்கு பத்தாம் வகுப்புதான் கல்வித் தகுதி. இருந்தபோதிலும் பட்டதாரிகள் ஆர்வமாக விண்ணப்பித்து இருப்பதை பார்க்கும்போது வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது இந்த ஒரு விஷயம்.